நிறைய பணம் சம்பாதிக்கும் வழி இதுதான்

பணமே மந்திரம்


பணம் இல்லாத மனிதர்கள் நிறைய துன்பங்கள், ஏமாற்றங்கள், வசதிக் குறைவை அனுபவிக்கிறார்கள். அதனால் அதிக பணம் இருந்தால் அதிக மகிழ்ச்சி கிடைக்கும் என்று நம்புகிறார்கள். அதனாலே அதிக பணம் கிடைக்கும் வழிகளை தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.

நிறைய பணம் சம்பாதிப்பதற்கு நான்கு குணங்கள் தேவை

  1. அச்சம் தவிர் :

பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் கணக்கிட்டு தொழில் தொடங்குபவர்களும் முதலீடு செய்பவர்களும் ஒருபோதும் மிகப்பெரும் லாபம் அடைய முடியாது. ரிஸ்க் எடுக்கும் மனோபாவமே அதிக பணம் கொண்டுவருகிறது. 

  • வெயிட் ப்ளீஸ்

நீண்ட காலம் பொறுமையாகக் காத்திருப்பது பணம் சம்பாதிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அமேஸான், நெட்பிளிக்ஸ் போன்ற நிறுவனங்கள் ஆரம்ப காலங்களில் நஷ்டத்தில் தடுமாறியவைதான். நீண்ட காலம் காத்திருந்த காரணத்தாலே மிகப்பெரிய லாபம் கிடைத்தது. இது, அனைத்து வகை முதலீட்டுக்கும் பொருந்தும்.

  • பணத்தை அனுபவியுங்கள்.

நீங்கள் விரும்பும் வாழ்க்கையை வாழ்வதற்கு பணத்தைப் பயன்படுத்துங்கள். பணம் என்னவெல்லாம் செய்யும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். முழுமையாக பணத்தை அனுபவிக்கத் தெரிந்தவருக்கே, சம்பாதிக்கும் வழிகளும் தென்படும். 

  • கணக்கு உதவாது

கணக்கு போட்டு அல்லது அறிவியல் ரீதியாக திட்டமிட்டு யாராலும் பணம் சம்பாதிக்க முடியாது. ஆழ்மனம் சொல்வதைக் கேட்டு செயல்படுபவர்களே அதிகம் சம்பாதிக்கிறார்கள். மற்றவருக்குத் தவறான முடிவாகத் தெரிவது, சிலருக்கு சரியான முடிவாக இருக்கலாம். எனவே, மனம் சொல்வதைக் கேட்க வேண்டும்.

அதிக பணம் அதிக மகிழ்ச்சி கிடைக்கும் என்பது உண்மை இல்லை. பணம் வசதி தரும், பணம் மதிப்பு தரும். ஆனால், பணம் மகிழ்ச்சி தராது. அது அவரவர் மனநிலையில் மட்டுமே உள்ளது. மகிழ்ச்சி என்பது வெளியில் கிடைப்பதல்ல, உள்ளே கிடைப்பது என்பதை புரிந்துகொள்ளுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment