பொதுவாக நாம் சாப்பிடுட்ம் உணவு உமிழ்நீருடன் சேர்ந்து அரைக்கப்பட்டு குடலுக்குள் செலுத்தப்படுகின்றது. அங்கே உண்ணப்பட்ட உணவு ஏற்கனவே உணவுடன் கலந்துவரும் உமிழ்நீருடன் சேர்ந்து செரிமானத் திரவங்கள் மற்றும் அமிலங்கள் இருக்கிறது. இவற்றால் உணவு முழுமையாக ஜீரணம் செய்யப்படுகிறது.
அதேநேரம், சாப்பிட்டதும் வயிறு நிறைய நீர் குடிப்பவர்களுக்கு குடிலில் செமிப்பதற்கு தேவையான அமிலங்கள் நீர்த்து விடும். அதனால் செரிமானக் குறைவு ஏற்படும். அதனால் தான் உணவுடன் அல்லது உணவு உண்டதும் அதிகளவு நீரை குடிக்கக் கூடாது.
சாப்பிட்டதும் அதிக நீர் குடிப்பவர்களுக்கு தொப்பை விழும் அபாயமும் உண்டு. அதேபோல் உணவு உண்டவுடன் குளிர்பானம் அருந்துபவர்களுக்கும் விரைவில் தொப்பை விழ வாய்ப்பு அதிகம்.
பசி எடுக்கும் நேரத்தில் சாப்பிடாவிட்டால் உணவை செமிக்க தயாராக இருக்கும் அமிலங்கள் உணவுக் குடல்களையும் ,அதன் பாதைகளையும் பாதிக்கிறது. இதனால் நெஞ்செரிச்சல் அல்சர் போன்றவை உருவாகலாம். ஆகவே, சாப்பிடும் நேரத்திலும் சாப்பாட்டுக்குப் பின்னர்ம் உடனடியாக நீர் அருந்த வேண்டாம். அரை மணி நேரம் ஜீரணத்துக்கு நேரம் கொடுங்கள். இதுவே, தொப்பையைத் தவிர்க்கும் வழி.