பெண்கள் முன்னேற்றத்துக்கு இதுதான் தடை

கண்டுபிடித்தால் ஜெயிக்கலாம்.

இந்தியாவில் பெண்களால் ஆண்களுக்கு இணையாக வளர முடியவில்லை. மற்ற நாட்டுப் பெண்கள் போன்று முன்னேற முடியவில்லை. இதற்கு காரணங்கள் தெரியுமா..?

  • இந்திய பெண்கள் வருடம் அரை லிட்டர் ரத்தத்தை வருடந்தோறும் மாதவிடாய் காலங்களில் இழக்கிறார்கள். வாழ்நாளில் 15 லிட்டர் ரத்த இழப்பு. அதிலும் 20% பெண்கள் பீரியட்ஸ் பிரச்சினைகளினால் வருடம் ஒன்றரை லிட்டர் ரத்தத்தை இழக்கிறார்கள்.
  • ஒவ்வொரு கர்ப்பத்திற்கும் குழந்தை இரண்டு யூனிட் ரத்தத்தை அம்மாவிடம் இருந்து எடுத்துக்கொள்கிறது. இதனால் இந்தியாவில் 50% பெண்களுக்கு இரத்த சோகை (அனீமியா) உள்ளது. இது உலகிலேயே மிக அதிகம்.
  • இந்தியப் பெண்கள் போதிய இறைச்சி உண்பதில்லை. இறைச்சி உண்பவர்களில் நாற்பது சதவிகிதம் பேர் மட்டுமே வாரம் ஒரு நாளுக்கு மேல் அசைவம் சாப்பிடுகிறார்கள். வெளிநாடுகளில் அதிகளவில் இறைச்சி உண்பதால், இவ்வளவு அனீமியா இல்லை.
  • சைவ உணவுகளிலுள்ள Phytate மற்றும் oxalate உணவில் உள்ள இரும்பை உடலுக்குள் செல்ல விடாமல் தடுக்கிறது. மேலும் சைவ உணவுகளில் உள்ள non-Heme iron, அசைவ உணவுகளில் உள்ள Heme iron-ஐ விட இரண்டரை மடங்கு கம்மியாகத்தான் உடலால் ஏற்கப்படுகிறது. இதனால் தான் இந்தியாவில் உள்ள அனைத்து வயது மகளிரில் பாதிப்பேர் ரத்தசோகையுடன் இருக்கிறார்கள்.
  • ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஆக்சிஜனை எல்லா செல்களுக்கும் எடுத்துச்செல்லும். அனீமியாவில் ஆக்சிஜன் இல்லாமல் எல்லா செல்களும் ஆற்றல் குறைவாக செயல்படும். இதனால் மூளைச்சோர்வு உண்டாகும். எந்த வேலையையும் ஆர்வமாக செய்வதற்கு எண்ணம் வராது.
  • அனீமியா இல்லாதவர்கள் வருடம் ஒருமுறை ஹீமோகுளோபின் ரத்த டெஸ்ட் செய்வது. அனீமியா இருப்பவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்த டெஸ்டை செய்வது நல்லது. இதை கண்டுபிடித்து அனீமியாவை விரட்டினால் வாழ்க்கையில் ஜெயித்துவிடலாம்.

Leave a Comment