• Home
  • அரசியல்
  • கள்ளச்சாராயத்தை இப்படித் தான் ஒழிக்க முடியும்.

கள்ளச்சாராயத்தை இப்படித் தான் ஒழிக்க முடியும்.

Image

செய்வாரா ஸ்டாலின்?

கள்ளச்சாராய மரணங்கள் ஐம்பதைத் தாண்டும் நிலையில், நிவாரணம் கொடுப்பதும் விற்பனை செய்தவர்களை கைது செய்வதும் மட்டும் போதாது. அடுத்த ஒரு மரணம் நிகழ்ந்துவிடக் கூடாது என்றால், கீழ்க்கண்ட செயல்கள் அவசியம் என்று கே.சி.பழனிசாமி ஒரு பதிவு போட்டிருக்கிறார்.

அதன்படி, விஷச் சாராயம் வழக்கில் கைது செய்யப்படுபவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவேண்டும். குறிப்பாக குண்டர் சட்டத்தில் அவர்கள் கைது செய்யப்படவேண்டும்.

சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து, VAO, ஊராட்சி செயலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம் செய்யப்படவேண்டும். அந்த எல்லைக்குட்பட்ட சட்டம் ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு துறை அதிகாரிகள் 3 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் பணியிடை நீக்கம் செய்யப்படவேண்டும்.

மீண்டும் அவர்களை பணியில் அமர்த்தும்போது பணியிறக்கம் செய்ய வேண்டும். * TASMAC கடைகளை ஒட்டோயிருக்கும் அனுமதிபெற்ற பார்களை தவிர வேறு எங்கு மது விற்பனை நடைபெற்றாலும் மேற்கண்ட நடவடிக்கைகள் அவர்கள் மீதும் எடுக்கவேண்டும்.

கஞ்சா, குட்கா, Cool Lip மற்றும் பிற போதைப்பொருட்களை விநியோகிப்பவர்கள் மற்றும் விற்பவர்கள் மீதும் இதே நடவடிக்கைகள் பாய வேண்டும். ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் உங்கள் ஆட்சியில் தான் இப்படி என்று மாற்றி மாற்றி குற்றச்சாட்டு சுமத்திகொள்வதை தவிர்த்து ஆக்கபூர்வமாக ஒருங்கிணைந்து இந்த திருத்தங்களை நடப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்றுவார்களா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இப்படி அதிரடி நிகழ்ந்தால் மட்டுமே மாற்றங்கள் நிகழும்.

Leave a Comment