தொப்பையைக் குறைக்க இதுவே போதும்.

சிம்பிள் டிப்ஸ்

ருசியான உணவை வயிறு நிறைய சாப்பிட்டதும் பீடா அல்லது இனிப்பு எதையாவது வாயில் போட்டுவிட்டு, ஒரு குட்டித் தூக்கம் போடுவது ரொம்பவே சுகமாக இருக்கும். உடல் எடை குறைப்பதற்கும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கும் இது மிகப்பெரும் சுமையாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

உணவுக்குப் பிறகு ஓய்வு எடுக்காமல் 10 நிமிடங்கள் நடக்கும்போது செரிமானம் எளிதாகிறது. அதோடு ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயரும் அபாயம் குறைவதுடன் நெஞ்செரிச்சலைத் தவிர்க்க முடியும்.  

அதேபோல் சாப்பிடுவதற்கு முன்பு சிறிது நேரம் நடப்பதும் நல்லது. இது பசியை தூண்டும். அதனால் சாப்பிடும் உணவு சீக்கிரம் செரிமானம் ஆவதற்கு வழி செய்து உடல் எடை குறைப்புக்கு வழி வகுக்கும். இதனை கடைப்பிடித்தால் நீரிழிவு நோயையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

Leave a Comment