• Home
  • அழகு
  • உதடு அழகுக்கு இதுவே போதும்

உதடு அழகுக்கு இதுவே போதும்

Image

வித்தியாசமான பியூட்டி டிப்ஸ்

இன்று ஒவ்வொரு பெண்ணும் ஆரோக்கியத்துக்காக செலவிடும் தொகையைவிட, அழகுக்காக செலவிடும் தொகையே அதிகம். ஒவ்வொரு பெண்ணும் நடமாடும் அழகுப் பொருட்களின் கடையாகத்தான் உலா வருகிறார்கள்.

ஆம், ஒரு பெண்ணிடம்தான் எத்தனையெத்தனை செயற்கை அழகூட்டும் பொருட்கள் தெரியுமா? கொஞ்சம் கணக்கிட்டுப் பாருங்கள். ஷாம்பூ, சோப்பு, ஹேர் கண்டிஷனர், கண் மை, லிப்ஸ்டிக், நகப்பாலிஷ், பவுடர், ஒயிட்னிங் க்ரீம், சன் கீரீம், ஃபேஷியல், ப்ளீச், மாஸ்க் என்று பொருட்களின் எண்ணிக்கை அவரவர் சம்பளத்துக்கு ஏற்ப அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

பெண்கள் அழகாக இருக்கவேண்டும் என்று எண்ணுவது இயல்புதான். ஆனால், அந்த அழகை இயற்கையாக பெற முயற்சிக்க வேண்டுமே தவிர, செயற்கை பொருட்கள் மூலம் பெற்றுவிட துடிக்கக்கூடாது. அழகு நிலையத்திற்கும், அழகு சாதனப் பொருளுக்கும்  செலவு செய்யும் தொகையை ஆரோக்கியத்திற்கு செலவு செய்தாலே, அழகு கிடைத்துவிடும். ஏனென்றால், தினமும் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தும் பெண்கள் கிட்டத்தட்ட 200 ரசாயன நச்சுப் பொருட்களை உடலில் சேர்த்துக்கொள்வதாக ஆய்வுகள் பயமுறுத்துகின்றன. ஆம், பெண்கள் பயன்படுத்தும் அழகு பொருட்களில் அலுமினியம், பாதரசம், காரீயம், ப்ளுரிட் , சிலிகான், எதில் அல்கஹால், பாரபின், ப்ரோபிளின் கிளைக்கால் போன்ற நச்சுக்கிருமிகளின் கலவைகளால்தான் தயாரிக்கப்படுகின்றன

காரியம் என்ற நச்சை உதட்டுச் சாயமாக பயன்படுத்துவோர் நாளமில்லா  சுரப்பிகள் செயல்பாட்டு குறைவையும், வியர்வை தடுக்கும் நறுமண பொருள்களில் உள்ள அலுமினியம் என்ற நச்சு பெண்களுக்கு மார்பக புற்று நோயைத் தருவதாகவும், வெயிலில் முகம் கருப்பாக மாறாமல் இருக்க பயன்படுத்தும் அழகு சாதனப்பொருளில் உள்ள ஆக்சி பென்சொன், பெண்களின் சுரப்பிகள் செயல்பாட்டை தடுப்பதாகவும் அறிவியல் ஆய்வேடுகள் தெரிவிக்கின்றன. சோடியம் லாரெட் மன அழுத்த  நோயும், ப்யுடைல் க்ளிக்கோல் கல்லீரல் பாதிப்பையும், ட்ரை கிளோசன் குழந்தை பிறப்பை தடுக்கும் காரணியாகவும் செயல்படுகிறது.

எனவே, இன்று பெண்களுக்கு பிரத்யேகமாக வரும் மார்பகப் புற்றுநோய், கருப்பை பாதிப்பு, கருப்பை புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு, மலட்டுத்தன்மை, ஆஸ்துமா, தோல் புற்றுநோய் போன்றவைகளுக்கு, செயற்கை அழகூட்டும் பொருட்களும் ஒரு காரணமாகவே இருக்கிறது.

செயற்கைகளை தள்ளிவைத்து இயற்கை முறையில் அழகை பெற்றுக்கொள்ள ஒவ்வொரு பெண்ணும் முயற்சிக்க வேண்டும். காலை எழுந்ததும் நடைப்பயிற்சி, யோகா அல்லது உடற்பயிற்சி செய்யவேண்டியது ஒவ்வொரு பெண்ணுக்கும் அவசியம். அதோடு நிறைய தண்ணீர் குடிப்பதும், குறிப்பிட்ட நேரத்தில் சரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம். ஒவ்வொரு பெண்ணுக்கும் தினமும் 8 மணி நேரம் தூக்கம் அவசியம்.

அதோடு, தேவையின்றி டென்ஷன் ஆகாமல் மனதையும் உடலையும் ஆனந்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதோடு உதட்டில் எப்போதும் புன்னகை பூத்திருக்கவும் வேண்டும்.

வைட்டமின் -D  சூரிய ஒளி மூலம் அதிகமாக நம் தோலுக்கு, எலும்பிற்கு  வலு சேர்க்கும் நிலையில் சன் ஸ்க்ரீன் கிரீம் என்ற பெயரில் விற்கும் கிரீம்களை பூசுவதால், வைட்டமின் D பற்றாக்குறை ஏற்படுவதோடு, தோலின் நிறமும், எலும்பின் வளர்ச்சியும் பாதிக்கப்படும்.

தோல் நிறம் மேம்பட தினமும் 3 லிட்டர் தண்ணீர், பால்,நெய், தயிர், மோர், எலுமிச்சை, மஞ்சள், தேன் , தேங்காய், கீரைகள், பழங்கள், காய்கறிகள், பாசிப்பயறு, பாதாம், வால்நட், கிரீன் டீ உண்டு வந்தாலே தோல் நிறம் மேம்படும். நம்மூர்  வேம்பு, துளசி, வில்வம், மஞ்சள், சோற்றுக்கற்றாழை ,மாவிலை,மருதாணி, செம்பருத்தி போன்றனவற்றை பயன்படுத்தித்தானே அழகுப் பொருட்கள் தயாரிக்கின்றனர்.

இயற்கையான கறிவேப்பிலை, கரிசாலங்கண்ணி, மருதாணி, பீட்ரூட் சாறு, காப்பிச் சாறு, செம்பருத்தி மூலமாக முடியை கருமையாக்க முடியும்.  இப்படி ஒவ்வொரு இயற்கை பொருட்களிலும் அழகும் ஆரோக்கியமும் ஒளிந்திருக்கும்போது, செயற்கை பொருட்களை ஏன் தேட வேண்டும்..?

கொஞ்சம் கொஞ்சமாக இயற்கைக்கு மாறுங்கள், இயல்புதான் அழகு என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

Leave a Comment

Image Not Found

கட்டுரை பகுதிகள்