கூட்டணிக்கு அரசியல் குடைச்சல்
சாம்சங் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ஊழியர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவர்களை மீண்டும் சந்தித்து ஆறுதல் சொல்ல போராட்டக் களத்திற்கு வந்திருக்கிறார் திருமாவளவன். கம்யூனிஸ்ட் கட்சிகளும் விடுதலை சிறுத்தைகள் இயக்கமும் இணைந்து அரசுக்கு அழுத்தம் கொடுப்பதன் பின்னணியில் நிச்சயம் அரசியல் அம்பலமாகியுள்ளது.
ஊதிய உயர்வுக்குப் போராடிய சாம்சங் ஊழியர்கள் கோரிக்கை முடிவுக்கு வந்த பிறகும் சங்கம் அமைப்பதற்கான கோரிக்கை கிடப்பில் கிடக்கிறது. சங்கத்தில் வெளி நபர்களை அனுமதிக்க வேண்டும் என்பதற்காகவே கம்யூனிஸ்ட் போராடுகிறது. சீனாவின் தூண்டுதல் காரணமாக கம்யூனிஸ்ட் கட்சியினர் கொரிய மொபைல் கம்பெனிக்கு திட்டமிட்டு நெருக்கடி தருவதாகவும் சொல்லப்படுகிறது.
ஆளும் பா.ஜ.க.வும் தி.மு.க.வும் நிறுவனத்திற்கு சாதகமாக நிற்கின்றன. சி.ஐ.டி.யு. சங்கம் அமைப்பதற்கு நீதிமன்ற ஒப்புதல் கிடைத்தவுடன் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறுவதை ஏற்காமல் போராடுகிறார்கள். இந்த நிலையில் தொழிற்சங்கம் அமைப்பதில் என்ன பிரச்னை..?
புருனோ வெளியிட்டிருக்கும் பதிவின் படி, ‘’1926ஆம் ஆண்டு தொழிற்சங்க சட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன் 1921ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்தியாவில் கைநாட்டு வைப்பவர்கள் 93 சதம். கையெழுத்து போடத்தெரிந்தவர்கள் 7 சதம் மட்டுமே. ஒரு பக்கத்தை வாசித்து புரிந்து கொள்ளக்கூடியவர்கள் அதற்கும் கீழ். எழுதப்படிக்க தெரிந்தவர்கள் ஆசிரியராகவோ, வங்கியில் அல்லது பிற நிறுவனங்களில் எழுத்தராகவோ இருந்தார்கள்.
எனவே அப்பொழுது ஒரு ஆலையில் வேலையில் 500 தொழிலாளர்களும் சேர்ந்து தொழிற்சங்கம் அமைத்தால், அங்கு அந்த 500 பேருமே எழுத படிக்க தெரியாதவர்களாக இருக்கும் வாய்ப்பு இருந்த காலத்தால் தொழிலாளர்கள் அல்லாதவர்கள் அந்த சங்கத்திற்கு தலைவராக இருக்கலாம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. எனவே தொழிற்சங்கத்தில் தொழிலாளர் அல்லாதவர்கள் இருக்க தொழிற்சங்க சட்டம் இடம் கொடுப்பது இதற்குத்தான்.
எனவே தொழிற்சங்கம் என்பது 1. பணிபுரியும் தொழிலாளர்கள் மட்டுமே உள்ளதாக இருக்கலாம் 2. பணிபுரியும் தொழிலாளர்கள் + ஏற்கனவே பணிபுரிந்த தொழிலாளர்கள் சேர்ந்து உள்ளதாக இருக்கலாம் 3. பணிபுரியும் தொழிலாளர்கள் + ஏற்கனவே பணிபுரிந்த தொழிலாளர்கள் + வெளிநபர்கள் சேர்ந்து உள்ளதாக இருக்கலாம் அதே நேரத்தில் ஒரு தொழிற்சங்கத்தை அங்கிகரீக்கும் உரிமை என்பது அந்த நிறுவனத்திற்குத்தான்.
ஒரு நிறுவனம் யார் வேண்டுமானாலும் உறுப்பினராக இருக்கும் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கலாம் மற்றொரு நிறுவனமோ, பணிபுரியும் தொழிலாளர்கள் + ஏற்கனவே பணிபுரிந்த தொழிலாளர்கள் சேர்ந்து உள்ளதாக இருக்கும் தொழிற்சங்கத்தைத்தான் அங்கீகரிப்போம். வெளியாள் இருந்தால் அங்கீகாரம் இல்லை என்று கூறலாம்.
மற்றொரு நிறுவனமோ, பணிபுரியும் தொழிலாளர்கள் + ஏற்கனவே பணிபுரிந்த தொழிலாளர்கள் சேர்ந்து உள்ளதாக இருக்கும் தொழிற்சங்கத்தைத்தான் அங்கீகரிப்போம். வெளியாள் இருந்தால் அங்கீகாரம் இல்லை என்று கூறலாம் மற்றொரு நிறுவனமோ, பணிபுரியும் தொழிலாளர்கள் மட்டுமே இருக்கும் தொழிற்சங்கத்தைத்தான் அங்கீகரிப்போம். வேறு யார் இருந்தாலும் அங்கீகாரம் இல்லை என்று கூறலாம்.’’
நீதிமன்றத்தின் முடிவு தங்களுக்கு சாதகமாக இருக்காது என்பதாலே போராட்டத்தை தீவிரப்படுத்துகிறது கம்யூனிஸ்ட் கட்சி. அதோடு, ஆளும் தி.மு.க. மீது தங்களால் எத்தகைய அழுத்தம் தர இயலும் என்பதை சுட்டிக்காட்டுவதற்கும் இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்துகிறார்கள். தங்களைப் போன்ற கட்சிகள் இல்லையென்றால் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாது என்பதை திருமாவளவன் உணர்ந்திருப்பதால் அதற்காக அதிக அழுத்தம் கொடுக்க இந்த களத்தைப் பயன்படுத்துகிறார்.
எல்லாமே அரசியல் தான்.