வீட்டை காலி செய்ய முடியாதுன்னு மிரட்டுறாங்க

Image

வாடகை ஒப்பந்தம் போடாமல் வீட்டை வாடகைக்குக் கொடுத்துவிட்டேன். இப்போது அவர்கள் காலி செய்ய முடியாது என்று அடம் பிடிக்கிறார்கள். அவரகளை எப்படி வெளியேற்றுவது என்று பலரும் கேட்பதுண்டு. அதற்கு வழக்கறிஞர் நிலா என்ன சொல்கிறார்..?

வழக்கறிஞர் நிலா :

தெரிந்தவர், உறவினருக்கு வாடகைக்கு விடுவதாக இருந்தாலும் வாடகை ஒப்பந்தம் போட்டுக்கொள்வது அவசியம். அந்த வாடகை ஒப்பந்தத்தில் 11 மாதங்கள் என குறிப்பிட்டு, பின் அதனை தேவைப்படும் காலம் வரை நீட்டித்துக்கொள்ள வேண்டும். இப்போது வாடகைக்கு குடியிருப்பவர் எத்தனை ஆண்டுகளாக குடியிருக்கிறார், ஒவ்வொரு மாதமும் சரியாக வாடகை கொடுக்கிறாரா, வீட்டு ரசீது, மின்சார ஆவணங்கள் யார் பெயரில் உள்ளது போன்ற தகவல்கள் குறிப்பிடவில்லை.

எனவே வீடு புதுப்பிக்க வேண்டியிருக்கிறது என்ற காரணம் காட்டி அவரை காலி செய்யும்படி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம். வீடு பழுது செய்தபிறகு அவருக்கே வீட்டை திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கும் என்றாலும், அப்போது முறையாக வாடகை ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம். உங்களுக்கு வேறு சொத்துக்கள் இல்லை என்றால், உங்களுக்கு அல்லது உங்கள் பிள்ளைகளுக்கு என்றால் எளிதாக நீதிமன்றம் மூலம் வீட்டை மீட்டுவிட முடியும். மூன்று மாதங்களுக்குள் காலி செய்ய வேண்டும் அவகாசம் வழங்கி மீறினால் எவிக்‌ஷன் வழக்கு தொடருங்கள்..

எம்.நிலா B.Com., LLM (Hons.), Diploma in Prof. Counselling

உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

சென்னை & மதுரை

Leave a Comment

Image Not Found

கட்டுரை பகுதிகள்