• Home
  • சர்ச்சை
  • பத்திரம் போட்டு மனைவியை வாடகைக்குத் தர்றாங்க

பத்திரம் போட்டு மனைவியை வாடகைக்குத் தர்றாங்க

Image

இப்படியும் ஒரு பெண் கொடுமை

தன் மனைவியின் கற்பு மீது ஊர் மக்கள் சந்தேகப்பட்டார்கள் என்ற காரணத்துக்காக மனைவியை தீ குளிக்கச் செய்த ஸ்ரீராமரின் நாட்டில் தான், மனைவியை வேறு ஒருவருக்கு வாடகைக்குக் கொடுக்கும் அவலம் நிலவுவது அம்பலமாகியிருக்கிறது.

பாஜக ஆளும் மத்தியப் பிரதேச கிராமங்களில் மனையை கணவனே வாடகைக்கு விடும் முறை நீண்ட காலமாகவே நடைமுறையில் உள்ளது என்கிறார்கள். இதை, “தாதிச்சா பிரதா” என்று அழைக்கிறார்கள். மனைவியை மட்டுமின்றி பெற்ற மகளையும் வாடகைக்கு அனுப்பும் கொடூரம் நடப்பதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் இது குறித்து ஒரு பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாலே ஒட்டுமொத்த அவலமும் வெளியே வந்திருக்கிறது

சொத்துப் பத்திரம் போன்றே இதற்கும் அரசு முத்திரைத்தாளில் பத்திரம் எழுதிக்கொள்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட வாரம், குறிப்பிட்ட மாதம் மனைவியாக செயல்படுவதற்கு சம்மதம் என்று எழுதி வாங்கப்பட்டு பணம் கொடுக்கப்படுகிறது. 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 லட்சம் வரை வாடகை மனைவிகள் கிடைக்கிறார்கள். அதாவது, இது ஏழ்மையில் இருக்கும் வீடுகள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கம் மற்றும் மேல்தட்டு வர்க்கம் வரையிலும் நடைமுறையில் இருக்கிறது.

இது ஒரே ஒரு முறை மட்டும் நடப்பது இல்லை. அந்த பெண்ணுக்கு இளமை இருக்கும் வரையிலும் அல்லது வாடிக்கையாளர்கள் தேடி வரும் வரையிலும் இந்த அவலம் தொடர்கிறது. இந்த 21ம் நூற்றாண்டிலும் இந்த அவலம் தொடர்கிறது என்றால் இதற்கு ஒரே காரணம், அந்த பெண்களுக்கு படிப்பு இல்லை, வேலை இல்லை, மதிப்பு இல்லை, மரியாதை இல்லை என்பது தான்.

பெண்கள் கையில் புத்தகம் கொடுத்த காரணத்தாலே தென் மாநிலங்கள் பெண்களை வேலைக்காக வெளிநாட்டுக்கு அனுப்புகின்றன. வட மாநிலங்கள் வாடகைக்கு அனுப்புகிறது.

Leave a Comment