சிங்கப்பூரில் ஓய்வுக்கு நேரமில்லை

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 344

சிங்கப்பூர் என்றாலே சுற்றுலாவாசிகளுக்கு செல்பவர்களுக்கு சொர்க்க பூமி என்றே சொல்லலாம். ஏனென்றால் சிங்கப்பூரில் பார்த்து ரசிப்பதற்கு மெர்லைன் பூங்கா, ஸ்கை பார்க், அண்டர் வாட்டர் வோர்ல்ட், மியூசிக்கல் ஃபவுண்டன், டால்பின் ல்கூன், கேபிள் கார், விலங்கியல் பூங்காவில் நைட் சபாரி, சிங்கப்பூர் ரிவர் க்ரூஸ் என ஏராளமான இடங்கள் உண்டு.

எனவே, மேயர் சைதை துரைசாமி  சிங்கப்பூர் செல்கிறார் என்றதுமே பலரும் அங்கு பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலை எடுத்து நீட்டினார்கள். அவர்கள் சொன்னதைக் கேட்டுக்கொண்டார், கொடுத்த பட்டியலை வாங்கிக்கொண்டார். ஆனால், எந்த ஒரு சுற்றுலா ஸ்தலத்துக்கும் போகவில்லை. அப்படி என்றால் என்ன செய்தார்..?

சிங்கப்பூரிலும் போய் மேயர் பணியை செய்தார். சிங்கப்பூரில் மக்கள் நலனுக்கும் நாட்டு நலனுக்கும் எப்படி முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன என்று ஆய்வு செய்தார்.

ஆம், 2012 ஜூன் 30ம் தேதி அதிகாலை 1.15 மணிக்கு சென்னையிலிருந்து   புறப்பட்டு,  சிங்கப்பூர் நேரப்படி காலை 8.15 மணிக்கு அந்த நாட்டை அடைந்தார். அந்த நேரத்தில் மேயர் சைதை துரைசாமியை சந்திக்கவந்த சிங்கப்பூர் மற்றும் தமிழக அன்பர்களை சந்தித்துப்  பேசினார். அடுத்து மேயர் சைதை துரைசாமி ஓய்வு எடுத்துக்கொள்வார் என்று எதிர்பார்த்த நேரத்தில், ‘ஆய்வு செய்யலாம்’ என்று கிளம்பினார்.

சிங்கப்பூர்  நகரில் உள்ள சாலைகள்,  மழைநீர் வடிகால்வாய்கள்,  நடை பாதைகள்,  மத்திய  தடுப்புச் சுவர்கள், தெரு விளக்குகள், பொதுக் கழிப்பிடங்கள், குப்பை  சேகரித்தல் போன்றவற்றின் உள்கட்டமைப்புகள் எல்லாம் எப்படி அமைக்கப்பட்டுள்ளன என்று ரோட்டில் இறங்கி ஆய்வு செய்யத் தொடங்கினார்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment