ஆரோக்கிய உடல், நிம்மதியான மனம், போதிய பணம், ஆதரவான உறவுகள் இருந்தால் வாழ்க்கைப் பயணம் இனிமையாக இருக்கும் என்பது ஞானகுரு கோட்பாடு. இதனை அடைவதற்கு சித்தர்கள், திருவள்ளுவர், புத்தர், ஜே.கிருஷ்ணமூர்த்தி என ஆயிரமாயிரம் மனிதர்கள் சொல்லிக்கொடுத்த வாழ்க்கை மந்திரங்களை தன்னுடைய பாணியில் சொல்கிறார் ஞானகுரு.
ஞானகுரு காட்டுக்குள் இருப்பவர் அல்ல. காற்றை போன்று எங்கெங்கும் பரவி இருப்பவர். உண்மையைத் தேடி அலைபவர். கேள்வி கேட்பதே தெளிவின் தொடக்கம் என்பதை அறிந்தவர். அவரது சிறிய பயணக் குறிப்புகளே ஞானகுரு நூலாக விரிந்திருக்கிறது.
மனவள ஆலோசகர் எஸ்.கே.முருகன் எழுத்தில் ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்து லட்சக்கணக்கான மக்களின் மனம் கவர்ந்த நூல் ஞானகுரு.
ஒவ்வொரு நபரும் ஞானகுருவாக மலர வேண்டும் என்பதே இந்த நூலின் நோக்கம். இந்த புத்தகத்தைப் படித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையிலும் நிச்சயம் மாற்றம் வரும். மகிழ்ச்சியைக் கண்டுபிடிப்பீர்கள்.
ஞானகுரு பதிப்பகத்தின் புதுப்பிக்கப்பட்ட வெளியீடு
ஞானகுரு
324 பக்கம் விலை 450 ரூபாய்
இ-புக் விலை – 200 ரூபாய்
80725 89355 செல்போன் எண்ணுக்கு பணம், முகவரி அனுப்புங்கள். எங்கள் செலவில் புத்தகம் அனுப்பிவைக்கப்படும்
க்யூ ஆர் கோடு மூலமாகவும், வங்கிக் கணக்கிலும் பணம் அனுப்பலாம்.
GYANAGURU PUBLICATION, UNION BANK OF INDIA, IFS CODE : UBIN0554847, Current Account No. 548401010050639