மனைவி அமைவதெல்லாம் சிரிப்பு விளையாட்டு

Image

சூப்பர் ஜோக்ஸ்

கணவன் : எதுக்கு பக்கத்து வீட்டு அம்மா கூட அடிக்கடி சண்டை  போடுற..?

மனைவி : அவங்களைப் பார்த்தா, அப்படியே உங்க அம்மாவைப் பார்க்கிற மாதிரி இருக்குங்க. அதான், என்னை அறியாம சண்டைக்குப் போயிடுறே.

………………..

மனைவி : என்னங்க, பக்கத்துவீட்ல ஏதோ சண்டை நடக்குது. லேசா எட்டிப் பார்த்துட்டு வாங்களேன்…

கணவன் : அப்படி எட்டிப் பார்த்ததுக்குத்தான் சண்டையே நடக்குது.

……………….

மனைவி : என்னங்க, எனக்கு நகை மேல இருந்த ஆசையே போயிடுச்சுங்க…

கணவன் : அடியே சும்மா இரு. இப்படித்தான் புடவை மேல ஆசை இல்லைன்னு சொல்லி புது புடவைக்காக என்  பேங்க் பேலன்ஸை கொள்ளை அடிச்சே. நகைக் கடைக்கு நான் தாங்க மாட்டேம்மா.

……………………….

மனைவி : என்னங்க, எனக்கு வாய்க்கு ருசியா சாப்பிட ஆசையா இருக்கு. ஒரு நாலைஞ்சு மாசம் எங்க அம்மாவை வரச்சொல்லட்டா..

கணவன் : எனக்கும் கண்ணுக்கு குளிர்ச்சியா பார்க்க ஆசையா இருக்கு. அப்படியே உன் தங்கச்சையையும் வரச் சொல்லிடு.

…………………………

கணவன் : எதுக்கும்மா இப்ப என்னை பார்த்து அடிக்கடி சிரிக்கிறே..?

மனைவி : நீங்கதானே, நான் சிரிக்கும்போது அழகா இருக்கேன்னு சொன்னீங்க…

…………………………

மனைவி : வாங்க டாக்டரை பார்க்கப் போகலாம். நீங்க தூக்கத்திலே என்னை ரொம்பவும் திட்டுறீங்க.

கணவன் : அடப்பாவி, நான் ராத்திரியெல்லாம் தூங்க முடியாமத்தானே திட்டுறேன்.

Leave a Comment

Image Not Found

கட்டுரை பகுதிகள்