வைரலாகும் ஒற்றை பென்குவின் வாக்….

இதுதான் வாழ்க்கை தத்துவமா?

தனியே தன்னந்தனியே ஒரு பென்குவின் பனி மலையை நோக்கி நடந்துசெல்லும் பழைய வீடியோ ஒன்று திடீர் வைரலாகியுள்ளது. அது எதுக்காக அங்கே போகிறது என்பதுதான் யாருக்கும் விடை தெரியாட கேள்வி.

உண்மையில் இந்த பெண்குவின் 2007-இல் வெளியான “Encounters at the End of the World” என்ற ஆவணப்படத்தில் வரும் ஒற்றை பென்குவின். உணவு அல்லது இணையைத் தேடாமல் பனி மலையை நோக்கி நடக்கும் ஒற்றை பென்குவின் இணையத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

உணவு, தூக்கத்துக்காக அல்லாமல், இணையை பிரிந்து பனிமலையை நோக்கிச் செல்லும் அந்த பென்குவினின் புகைப்படத்தை தங்களோடு ஒப்பிடும் இணையவாசிகள் சிலர் அதை நெகடிவ்வாகவும், ‘ஆபத்தானதாக இருந்தாலும் தனக்கான பாதையில் பயணிப்பது’ என்ற பொருளில் சிலர் பாசிட்டிவ் ஆகவும் பார்க்கிறார்கள்.

அந்த பென்குவின் போற வழி பனி. சுற்றி முழுக்க குளிர். ஒரு மரமில்லை. ஆனாலும் ஏன் அங்கே போகிறது. அதற்கு வேறு வழியே இல்லை.

பின்னேயும் உறைபனி. எனவே, யோசிப்பதற்கும் திரும்புவதற்கும் நேரம் இல்லை. நடந்துகொண்டே இருந்தால் பாதை கிடைக்கும் என்பது அந்த பென்குவின் நம்பிக்கை. உயிர் வாழவேண்டும் என்றால் நடக்கணும். அதுபோல், மனிதர்களும் நடந்துகொண்டே இருந்தால் போதும் என்கிறார்கள்.

வாழ்க்கையில் பிரச்னை, சிக்கல், சோகம், கோபம் வரும்போது எதையும் கண்டுகொள்ளாமல் நடந்துகொண்டே இருங்கள். அவ்வளவுதான் வாழ்க்கை

Leave a Comment