• Home
  • அரசியல்
  • புலி, சுறா எதுவுமே தேறலை, யானை என்னாகும்?

புலி, சுறா எதுவுமே தேறலை, யானை என்னாகும்?

Image

கவலையில் விஜய் ரசிகர்கள்

விஜய்க்கு விலங்கு தோஷம் உண்டு என்று சொல்வார்கள். புலி, சுறா, பீஸ்ட் என்று பெயர் வைத்து வெளியான படங்கள் எதுவுமே சரியாகப் போகவில்லை. இந்த நிலையில் இரண்டு யானை வைத்திருக்கிறாரே, இது சரியா வருமா என்று அவரது ரசிகர்கள் கவலைப்படுகிறார்கள்.

இந்த நிலையில் கொடி குறித்து விஜய் விரைவில் விரிவாகப் பேசுவார் என்று சொல்லப்படுகிறது. இப்போது அந்த கொடி குறித்து முழு ஆய்வு (?) வெளியிட்டுள்ளனர். அதாவது கொடியில் சிவப்பு, மஞ்சள், சாம்பல், நீலம், பச்சை, ஊதா என்று 6 நிறம் உள்ளது. பழந்தமிழர் போரில் வென்ற பிறகு சூடும் வாகை மலர் உள்ளது. இந்த வாகை மலரைச் சுற்றி 23 பச்சை நட்சத்திரங்களும் 5 நீல நட்சத்திரங்களும் உள்ளன. யானை வெற்றியையும் போராட்ட குணத்தையும் வளமையையும் குறிக்கிறது என்று அவரது ரசிகர்கள் தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி விஜய் கொடியின் மீது புகார் கொடுத்திருக்கிறார்கள். எங்கள் கட்சியைத் தவிர வேறு யாரும் யானையைப் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்திருக்கிறார்கள். அதேபோல் வெள்ளாளர் சமூகத்தினர், எங்களது வி.எம்.கே. கொடியைப் பார்த்து காப்பியடித்திருக்கிறார் என்று புகார் கூறிவருகிறார்கள்.

எது எப்படியோ விஜய் வித்தியாசமான முறையில் கட்சி கொடியை அறிவிப்பு செய்திருக்கிறார், இந்த நிகழ்வுக்கும் அதிகமான நபர்களை அழைக்காமல் வீட்டுக்குள் வைத்தே கொடியை வெளியிட்டிருக்கிறார், இன்னமும் வெகுஜன அரசியலுக்குள் நுழையாமல் இப்படியே காலம் கடத்தப்போகிறாரா விஜய்..?

Leave a Comment