• Home
  • சக்சஸ்
  • இந்தியாவை தனியொருவனாக சுருட்டிய சுழல் ஹீரோ

இந்தியாவை தனியொருவனாக சுருட்டிய சுழல் ஹீரோ

Image

சபாஷ் ஜெஃப்ரி வந்தர்சே

உலகிலேயே தலை சிறந்த பேட்ஸ்மேன்கள் நிறைந்த இந்திய அணியை தனி ஒரு மனிதனாக சுருட்டி இலங்கைக்கு வெற்றி தேடித் தந்திருக்கிறார் ஜெஃப்ரி வந்தர்சே. ஜெயசூரியாவுக்கு அடுத்து சுழல் பந்தில் சூப்பர் ஹீரோ கிடைத்துவிட்டார் என்று இலங்கை மக்கள் கொண்டாடுகிறார்கள்.

இலங்கை அணியில் ஹசரங்கா காயம் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து விலகியநிலையில் அவருக்குப் பதிலாக வந்தர்சே களமிறங்கினார். இவர்  2015ம் ஆண்டு சர்வதேச தளத்தில் அறிமுகமாகி இருந்தாலும் இதுவரை 22 ஒருநாள் போட்டிகளில்தான் விளயைாடியுள்ளார். ஆனால், இந்த போட்டியில் “லெக் ஸ்பின்னர்” ஜெஃப்ரி 10 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதையும் வென்றுவிட்டார்.

அதிலும் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, சுப்மான் கில், ஷிவம் துபே, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் ஆகியோரின் விக்கெட்டுகளை 29 பந்துகள் வித்தியாசத்தில் வான்டர்சே வீழ்த்தியதுடன் நில்லாமல் இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளியும் வைத்திருக்கிறார்.

இதையடுத்து, இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய 5வது இலங்கை பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜெஃப்ரி பெற்றுள்ளார்.

முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் சேர்த்தது. 241ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 42.2 ஓவர்களில் 208 ரன்களுக்கு ஆட்டமிழந்து 32 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா மட்டுமே தொடர்ந்து 2வது போட்டியிலும் அரைசதம் அடித்தார். ரோஹித் 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா ஆட்டமிழக்காதவரை இந்திய அணி 97 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி பயணித்தது, இந்திய அணியின் வெற்றி 85 சதவீதத்துக்கு மேல் இருந்தது. ஆனால், ஜெஃய்ப்ரி பந்துவீச வந்தபின் இந்திய அணியின் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டு அடுத்த 50 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி தோல்வி அடைந்துவிட்டது.  

இதையடுத்து 2021ம் ஆண்டுக்குப்பின் சர்வதேச அரங்கில் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக முதல் வெற்றியை இலங்கை அணி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

கடந்த 11 போட்டிகளாக இலங்கைக்கு எதிராக தோல்வி அடையாமல் இருந்து வந்த இந்திய அணி முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக கெளதம் கம்பீர் பொறுப்பேற்றபின் சந்திக்கும் முதல் தோல்வி இதுவாகும்.

ஜெஃப்ரி பந்துவீச்சு அற்புதமான ஸ்பின் பவுலிங்காக அமைந்துவிட்டது. அட்டகாசமாக பந்தை இரு பக்கமும் திரும்புகிறார்.  துபேயை அவுட் செய்ததே அட்டகாசம். முந்திய பந்தை ஆஃப் சைடு திருப்பி… அடுத்த பந்தை லெக் சைடு திரும்பி மிடில் ஸ்டம்பில் LBW.  அதேபோல…. விராத் கோலி, ஷ்ரேயாஸ், ராஹுல் விக்கெட்களை எடுத்தது எல்லாம் அசத்தல் ரகம்.

India 97 for 0.

India 97 for 1.

India 116 for 2.

India 116 for 3.

India 123 for 4.

India 133 for 5.

India 147 for 6. (Rahul dismissed for duck)

இன்னும் இரண்டு போட்டிகள் மிச்சமிருக்கின்றன. இந்திய அணியில் மிடில் ஆர்டர் அத்தனை ஸ்ட்ராங்க் இல்லை என்று சொல்வது இந்த போட்டியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜெஃப்ரி சுழலில் இருந்து மீண்டு வருமா என்பதைப் பார்க்கலாம்.

Leave a Comment