டெங்குக்கு மருந்து இல்லாத அவலம்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 414

சென்னை நகரில் டெங்கு நோய் பரவத் தொடங்கியதும், அந்த நோய் பற்றிய அச்சம் மக்களிடம் அதிகரித்தது. மக்களின் அச்சத்தைக் குறைக்கவும், அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் மேயர் சைதை துரைசாமி களத்தில் இறங்கினார்.

ஆங்கில மருத்துவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் மேயர் சைதை துரைசாமி தீவிர ஆலோசனை நடத்தினார்.

அப்போது ஆங்கில மருத்துவர்கள், ‘டெங்குக் காய்ச்சலுக்கு பிரத்யேகச் சிகிச்சை என்று எதுவும் இல்லை. காய்ச்சலைக் கட்டுப்படுத்த பாராசிட்டமால் மாத்திரையும், உடன் உடல்வலியைப் போக்க உதவும் மருந்துகளும் தரப்படும். சிலருக்கு குளுக்கோஸ் மற்றும் சலைன் தேவையான அளவுக்கு ஏற்றப்பட வேண்டும். தட்டணுக்கள் குறைந்தவர்களுக்கு அதை ஈடுகட்ட நரம்பு மூலமாக தட்டணுக்கள் மிகுந்த ரத்தம் செலுத்தப்பட வேண்டும்.

காய்ச்சல் பாதித்த காலத்தில் நோயாளி நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். உடலில் நீரிழப்பு ஏற்படும் என்பதால், அதிக அளவில் நீர்ச்சத்து உணவுகளை உட்கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பால், பழச்சாறு, இளநீர், கஞ்சி போன்ற திரவ உணவுகளை அதிகம் சாப்பிட்டால் போதும். இதுதவிர டெங்கு காய்ச்சலுக்கு என்று குறிப்பாக மருந்து, மாத்திரைகள் எதுவும் இல்லை’’ என்று தெரிவித்தனர்.

ஆங்கில மருத்துவத்தில் மருந்து இல்லை என்று சொல்லப்பட்டதைக் கேட்டு மேயர் சைதை துரைசாமி அதிர்ச்சி அடைந்தார். அதேநேரம், மேயர் சைதை துரைசாமி நம்பிக்கை இழக்கவில்லை. ஏனென்றால், எந்த ஒரு பிரச்னை என்றாலும், அதற்கு ஒரு தீர்வு இருக்கவே செய்யும் என்பதில் முழு நம்பிக்கை கொண்டவர் மேயர் சைதை துரைசாமி.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment