• Home
  • சக்சஸ்
  • ரோட்டில் போராடியவர் ஒலிம்பிக்கில் மின்னுகிறார்

ரோட்டில் போராடியவர் ஒலிம்பிக்கில் மின்னுகிறார்

Image

அரை இறுதியில் வினேஷ் போகத்

கடந்த ஆட்சியின் போது வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் ரோட்டில் நின்று போராடினார்கள். அவர்களுக்கு நியாயம் கிடைக்கவே இல்லை. ஆனால், அவர் தான் இப்போது இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றும் அளவுக்கு விளையாடி வருகிறார்.

காமன்வெல்த், உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், ஆசிய போட்டிகளில் இந்தியாவுக்காக பதக்கம் வென்றவர் வினேஷ் போகத். 29 வயதான அவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பாஜக எம்.பி-யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து இந்திய மல்யுத்த வீரர்கள் நடத்திய போராட்டத்தில் ஈடுபட்டு குரல் எழுப்பினார்.

இவர் ஒலிம்பிக்கில் விளையாடுவதை தடுக்கும் நோக்கில் பிரிஜ் பூஷன் மற்றும் அவரது ஆதரவாளர் சஞ்சய் சிங்கும் இணைந்து முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் கடந்த ஆண்டு அவருக்கு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனாலும் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் வினேஷ் போகத், ஜப்பானின் யு சுசாகியுடன் மோதினார். ஜப்பான் வீராங்கனை ஆதிக்கம் செலுத்தினாலும், தொடர்ந்து போராடிய வினேஷ் போகத் 16-ஆவது சுற்றில் ஜப்பான் வீராங்கனையை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தினார். இதன் மூலம் வினேஷ் போகத் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

இது முக்கியமான வெற்றியாக கருதப்படுகிறது. காரணம் உலகின் நம்பர் 1 வீராங்கனையும், 4 முறை உலக சாம்பியனும், டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான ஜப்பானின் யு சுசாகியை இந்திய வீராங்கனை வீழ்த்தியிருப்பது கவனிக்கத்தக்கது. தொடர்ந்து நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் உக்ரைன் நாட்டின் ஒக்ஸானா லிவாஜை 7-5 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் வினேஷ் போகத்.

அரை இறுதியில் வென்று விட்டால் வினேஷ் போகத் வெற்றி பெற்றால், இந்தியாவுக்கு இன்னொரு பதக்கம் உறுதியாகிவிடும்.

Leave a Comment