ஜெயலலிதா தொடங்கிய மலிவுவிலை உணவகம்

என்ன செய்தார் சைதை துரைசாமி – 512

செய்வதை திருந்தச் செய்ய வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக மேயர் சைதை துரைசாமி மலிவு விலை உணவகம் நஷ்டமின்றி நடத்துவதற்கு தெளிவான அறிக்கை தயார் செய்தார் மேயர் சைதை துரைசாமி. இந்த அறிக்கையை  அன்றைய முதல்வரின் செயலாளரை சந்தித்துக் கொடுத்தார்.

மலிவு விலை உணவகத்திற்கு ஆகும் செலவு, கிடைக்கும் வருமானம் மற்றும் ஏழை மக்களுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகள் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டவர் மிகுந்த ஆர்வமாகி விட்டார். அதன்பிறகு மற்ற அதிகாரிகளை சந்தித்துப் பேசினார்.

அதனைத் தொடர்ந்து மேயர் சைதை துரைசாமியே நேரடியாக ஒவ்வொரு துறை அதிகாரியையும் சந்தித்துப் பேசி, தெளிவான அறிக்கை சமர்ப்பித்ததும் மலிவு விலை உணவகம் அமைக்கும் பணி தீவிரமானது. பரீட்சார்த்த ரிதியில் ஒருசில உணவகங்கள் மட்டும் முதலில் தொடங்குவதற்கு அதிகாரிகள் பச்சைக் கொடி காட்டினார்கள்.

இதையடுத்து பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 9 உணவகங்கள் மட்டும் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மேயர் சைதை துரைசாமியின் நேரடி கண்காணிப்பில் உணவகங்கள் தயாராகின. 2013, மார்ச் 19-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா, சாந்தோமில் இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

இந்தத் திட்டத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பாணியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் சைதை துரைசாமி மிகவும் உறுதியாக இருந்தார். அதாவது இங்கு முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

ஏன் தெரியுமா?

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment