புதுயுகத்தில் சட்டப் புரட்சி
புதுயுகம் தொலைக்காட்சியில் 100வது நாளைத் தொட்டு புதிய சாதனை படைத்திருக்கிறது, ‘சட்டம் ஒரு வகுப்பறை’ விழிப்புணர்வு சட்டத் தொடர்.
சட்டம் என்பது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையோடு நெருக்கமாக இணைந்த ஒன்று. ஆனால் அதைப் பற்றிய விழிப்புணர்வு பொது மக்களிடம் இன்னும் முழுமையாக சென்றடையவில்லை. இந்த குறையை நீக்குவதற்கும், ஒவ்வொரு நபருக்கும் தேவையான அடிப்படை சட்டம் குறித்த தகவல்கள் வழங்குவதையும் உறுதிப்படுத்துவதே, புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், “சட்டம் ஒரு வகுப்பறை” நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்.
இது ஒரு நேரலை நிகழ்ச்சி என்பதால், பார்வையாளர்கள் நேரடியாக தொலைபேசி மூலம் இணைந்து, தங்கள் சந்தேகங்களைக் கேட்டு உடனுக்குடன் சட்ட நிபுணர்களிடமிருந்து சரியான விளக்கம் பெற்றுக்கொள்ள முடியும். பணம் செலவழிக்காமல் சட்டத்துறை சார்ந்த வல்லுநர்களிடம் நேரடியாகப் பேசி தீர்வு பெறுவது, “சட்டம் ஒரு வகுப்பறை”நிகழ்ச்சியின் வரப்பிரசாதமாகும்.
மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகள், சட்ட ரீதியாக வழிகளும் சொல்லித்தருவதால் மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை பிறக்கிறது. அதோடு, சட்டம் குறித்த கற்றல் மேடையாகவும் இந்த நேரலை நிகழ்ச்சி மாறியுள்ளது..
திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, குடும்பம், சொத்து, காப்பீடு நலன், நுகர்வோர் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, வேலைத்தள உரிமைகள், காவல் துறை சேவைகள், அரசு சேவைகள், மோசடி, சைபர் குற்றங்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் மக்களுக்கு தேவையான சட்ட விளக்கங்களை வழங்குகிறது. அனுபவமுள்ள உச்ச நீதிமன்ற மற்றும் உய ர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு ஒவ்வொரு பிரச்னைகளுக்கும் தெளிவான விளக்கம் கொடுக்கின்றனர். இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரபலமான வழக்கறிஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்துள்ளனர்.
ஒவ்வொரு பகுதியிலும் மக்களின் வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவங்களை எடுத்துக்கொண்டு, அதில் சட்டம் எப்படி செயல்படுகிறது என்பதைப் புரியவைக்கிறது. இது வெறும் சட்ட விளக்கம் அல்ல, மாறாக வாழ்க்கை வழிகாட்டியாகவும் திகழ்கிறது.
பாதிக்கப்பட்ட நபர்கள் எங்கே, எப்படி புகார் செய்யலாம்?, காவல் நிலையத்தில் புகார் அளிப்பது எப்படி?, பெண்களை பாதுகாக்கும் சட்ட உரிமைகள் என்ன?, இத்தகைய எளிய கேள்விகளுக்கு மக்களின் மொழியில் மிக எளிமையாக பதிலளிக்கிறது, மக்களின் நிஜ அனுபவங்களின் மூலம் சட்டம் எப்படி அவர்களின் பக்கத்தில் நிற்கிறது என்பதையும் நிகழ்ச்சி வெளிப்படுத்துகிறது. இந்த நிகழ்ச்சியை புதுயுகம் சார்பாக கே.வினோத் குமார் தயாரித்து வழங்குகிறார்.
தொகுப்பாளர்களாக வழக்கறிஞர் நிலா மற்றும் யாழினி திருமுகம் ஆகிய இருவரும் நிகழ்ச்சியை உயிரோட்டத்துடன் நெறிப்படுத்துகின்றனர்.
புதுயுகம் தொலைக்காட்சி எப்போதும் சமூகப் பொறுப்புடன் செயல்படும் ஊடகம் எனும் அடையாளம் மீண்டும் ஒரு முறை இந்நிகழ்ச்சியின் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொருவர் மனதிலும் சட்டத்தின் வெளிச்சம் பரவ வேண்டும் என்ற இலக்குடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி மக்களின் பேராதரவுடன் நூறு நிகழ்ச்சிகளைத் தாண்டி தொடர்ந்து பயணிக்கிறது. சட்டத்தை அறிந்தால் பயம் குறையும், நம்பிக்கை பெருகும் என்ற நம்பிக்கையை மக்களிடம் விதைத்த, ‘சட்டம் ஒரு வகுப்பறை’ நிகழ்ச்சி நாள்தோறும் இரவு 8 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பாகிவருகிறது.
பார்த்துப் பயனடையுங்கள், மற்றவர்களையும் பயனடையத் தூண்டுங்கள்.












