கொலுசுகள் பேசும் மொழி..!

Image

பியூட்டி டிப்ஸ்

கொலுசு ஒலியை வைத்தே வருவது குழந்தையா, குமரியா என்பதை அறியமுடியும். அதேபோன்று அந்த பெண் கோபமாக இருக்கிறாளா அல்லது கொஞ்சும் மனநிலையில் இருக்கிறாளா என்பதையும் கொலுசின் ஒலியைக் கொண்டே அறியலாம்.

ஒவ்வொரு பெண்ணும் அழகு தான். ஒவ்வொரு ஆபரணங்களும் ஒவ்வொரு விதமாக அவளின் அழகிற்கு அழகு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. காலுக்கு அழகு சேர்ப்பது என்றால் அது கொலுசு தான் என்று சொன்னால் அது மிகையாகாது. ஜல்.. ஜல்லென்று வரும் கொலுசு சத்தம் பிடிக்காதவரே இல்லை என்று சொல்லலாம்.

இந்த கொலுசு வந்த கதை தெரியுமா..?. சுமார் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் மெசபடோமியாவில் வாழ்ந்த சுமேரியர்கள்தான் முதலில் கொலுசை பயன்படுத்தியதாக தெரிகிறது.

பழங்காலத்தில் இதனை எகிப்தியர்கள் அணிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வசதி படைத்தவர்கள் இந்த கொலுசை ஜாதிக்கற்களைப் பதித்து அணிந்தார்களாம். “தேரா மன்னா செப்புவது உடையேன்” என்று கூறி தனது காலில் கிடந்த தண்டையை எடுத்து வீசி காலத்தால் அழியாமல் காவியம் தந்த கண்ணகி கூறித் தண்டைக்கு மறுபெயர் கொலுசுதான்.

கொலுசுக்கு இந்தியாவில் ஒரு பெரிய வரலாற்று பாரம்பரியமும், பின்னணியும் உண்டு. இந்தியாவில் வெள்ளிக்கு ஒரு தனி மதிப்பு உண்டு. வெள்ளி குளிர்ச்சி தரும் உலோகம். வெள்ளி நகைகளை அணிவதால் ஆயுள் விருத்தியாகும் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. பழங்காலத்தில் பெண்கள் காலில் காப்பு, தண்டை, சிலம்பு போன்ற தடிமனான அணிகலன்களை அணிந்து வந்தனர். இன்றும் மலை சாதி மக்கள் அதிக எடையுள்ள காப்பு போல் தடிமனான வெள்ளி கொலுசை அணிகின்றனர்.

குழந்தைகளுக்கு கொலுசு அணிவிப்பது இந்தியாவில் நடைமுறையிலுள்ள பழக்கம். கொலுசு ஒலி குழந்தையின் அசைவுகளை உறங்கும் போதும், விழித்திருக்கும் போதும் தாய்க்கு அறிவிக்கும். கொலுசுடன் தளர் நடைபோட்டு நடக்கும் குழந்தைகளைக் காணக் கண் கோடி வேண்டும். எல்லாவற்றையும் மீறி கொலுசு அணிவதால் குழந்தையின் பாதத்திறகு நல்ல பலத்தையும் கொடுக்கிறது என்ற கருத்தும் நிலவுகிறது.
சின்னச் சின்ன முத்துக்கள், சிறிய சலங்கைகள், பின்னல் வேலைபாடுகள் ஆகிய எல்லாம் கூடிய கொலுசுகள் பழைய பாணியாவிட்டன. தற்போது பெண்கள் தங்கம், வெள்ளி மட்டுமின்றி பிளாஸ்டிக், சாதாரண நூல் என பலதரப்பட்ட பொருட்களைக்கொண்டு நவீன பாணியில் மெலிய சங்கிலிபோல வடிவமைக்கப்படும் கொலுசுகளை அணிகிறார்கள்.

பெண்கள் ஒரே காலில் இரண்டு விதமான கொலுசுளைக் கூட அணிகிறார்கள். சில கொலுசுகள் முழுவதுமாக முத்துகளை இணைத்தோ அல்லது ஆங்காங்கே நான்கு முத்துக்களை இணைத்தோ தயாரிக்கப்படுகின்றன. இன்னும் சில செயற்கைக் கற்கள் அதாவது குந்தன் கற்கள், மணிகற்கள், கிரிஸ்டல்களை இணைத்தும், வெள்ளி மணிபோன்ற வடிவத்திலும் செய்யப்படுகின்றன.

வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது. தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. அதாவது நமக்கு நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்ல பயன் தரும்..

பொதுவாக வீட்டில் இருக்கும் பெண்கள், பணிக்கு செல்லும் பெண்கள் என அனைத்து பெண்களும் கொலுசு அணிந்திருப்பார்கள். சுடிதார், சேலை, தாவணி போன்ற ஆடைகளுக்கு கொலுசு கூடுதல் அழகினை தரும். ஆனால் ஜீன்ஸ் மற்றும் அரை ஜீன்ஸ்அணிந்து வெளியில் சென்றால், கொலுசு அணிவேண்டாம். ஏனெனில் மொடர்ன் ஆடைகளுக்கு கொலுசு நன்றாக இருக்காது, அதுமட்டுமின்றி ஆடை அலங்காரத்தை கெடுத்துவிடும்.

கொலுசுகள் பல்வேறு டிசைன்களில் வடிவமைக்கப்படும், 5 முத்துக்கள் கொண்டது, 3 முத்துக்கள் கொண்டது. மெல்லிய பட்டையிலான கொலுசு மற்றும் தடிமனான மாடல்கள், இரண்டிற்கும் இடைபட்ட மாடல்கள் என்று பலவும் உண்டு. இதில் பெண்கள் கவனிக்க வேண்டியது, தங்கள் கால்களுக்கு எந்த மாரியான கொலுசு அழகாக இருக்கும் என்பதை பார்த்து அணியவேண்டும்.

கால்கள் கொஞ்சம் தடிமனாக இருக்கும் பெண்கள் மெல்லிய கொலுசு போட்டால், அவ்வளவு எடுப்பாக தெரியாது, எனவே கொஞ்சம் தடிமனான கொலுசினை அணியுங்கள்.

சற்று சிவப்பான நிறம் மற்றும் மெல்லிய கால்களை கொண்ட பெண்கள், 3 முத்துக்கள் கொண்ட மெல்லிய பட்டையிலான கொலுசினை அணியுங்

மாடர்ன் உடைக்கு நைலான், நூல் மற்றும் லெதர் போன்றவற்றால் செய் யப்பட்ட கொலுசுகள் அணிந்தால் பார்க்க அழகாக இருக்கும். இவை மெல்லிய கயிற்றில் மீன் பொம் மைகள், சின்ன கற்கள், பாசி மணிகள், கிரிஸ்டல் கற்கள், சங்குகள், கண்ணாடி கற்கள், மரத் துண் டுகள், பேஷன் முத்துக்கள் இணைக்கப்பட்டு வரு கின்றன. இவற்றை இரண்டு கால்களிலும் அணிய லாம். அல்லது ஒரு வலது காலில் மட்டும் அணி யலாம். சிலர் கறுப்பு கயிற்றில் பின்னல் போல் செய்து ஆங்காங்கே மணிகள் இணைத்து காலில் கட்டி இருப்பார்கள். இவை ஜீன்ஸ், ஸ்கர்ட், பார்ட்டி உடைகளுக்கு அழ காக இருக்கும். அதே சமயம் டிசைனர் கொலுசுகளை கழுத்தில் அணியும் சோக்கராகவும் பயன்படுத்தலாம். சிலர் இதை பிரேஸ்லெட்டாவும் பயன் படுத்துகிறார்கள்.

கொலுசு எப்படியிருந்தாலும் அழகுதான்.

Leave a Comment