• Home
  • அரசியல்
  • கஸ்தூரியைப் பார்த்து நீதிபதி இப்படி சொல்லிட்டாரே

கஸ்தூரியைப் பார்த்து நீதிபதி இப்படி சொல்லிட்டாரே

Image

முடியாத தெலுங்கு பஞ்சாயத்து

பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கு வந்த கதையாகிப் போனது நடிகை கஸ்தூரி விவகாரம். பிராமணர்களுக்கு ஆதவாகப் பேச வந்த நடிகை கஸ்தூரி சம்பந்தமில்லாமல் அங்கு தெலுங்கர்களைப் பற்றி பேசியது பெரும் வில்லங்கமாகி இப்போது தலைமறைவாகும் சூழல் வந்திருக்கிறது. இந்த நிலையில் நீதிபதி கூறிய வார்த்தைகள் கஸ்தூரியை கதிகலங்கச் செய்துள்ளது.

தெலுங்கு மக்களைத் தவறாகப் பேசியது மட்டுமின்றி, மீண்டும் ஒரு முறை எல்லோரையும்  அழைத்து நான் அப்படி பேசவே இல்லை என்று மீண்டும் ஒரு முறை அவமரியாதைச் செய்தார். எனவே, தெலுங்கு மக்களை வேண்டுமென்றே வன்மமாக வெறுப்பாகப் பேசிய விவகாரத்தில் மூன்று நான்கு சட்டப் பிரிவுகளில் வழக்குப் பாய்ந்துவிட்டது.

கைது பயத்தில் ஓடி ஒளிந்திருக்கும் நடிகை கஸ்தூரி முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், உத்தரவிட்டார்.  அதோடு, ‘’தெலுங்கர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் கிடையாது. தமிழ்நாட்டின் ஒரு பகுதிதான் தெலுங்கர்கள் . சென்னையின் முழு உருவாக்கமே தெலுங்கு சமூக மக்கள்தான்…’ என்று கடும காட்டியிருக்கிறார்.

மேலும், உலகமெங்கும் வாழும் தெலுங்கர்களின் மனம் புண்பட்டு இருக்கிறது! தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஆந்திரா தெலுங்கானா போன்ற மாநிலங்களில் வாழக்கூடிய மக்களையும் இந்தப் பேச்சு பாதிக்கும் என்றுகூடத் தெரியாமல் வேண்டுமென்றே கஸ்தூரி பேசியிருக்கிறார் என்று காட்டம் காட்டியிருக்கிறார்.

சீமான் என்னவென்னமோ பேசுகிறார், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் கஸ்தூரியை மட்டும் இப்படி விரட்டி விரட்டி அடிக்கலாமா யுவர் ஹானர்.

Leave a Comment