சினிமா பாடலில் உயிரின் மூச்சு

கவித்துவம் – 5

சினிமா பாடல் என்பது இசையின் குழந்தை. அதில் நல்ல வரிகள் சேரும்போது உயிரை உசுப்பிவிடும். கண்களில் நீரை வரவழைக்கும். அப்படிப்பட்ட சில பாடல்கள் இங்கு…

இரவின் போர்வை என்னை சுழ்ந்து

மெல்ல மெல்ல மூடும் தாழ்ந்து

விடியலை தேடினேன்

உன்னிடம் வா பெண்ணே

பாதமெங்கும் சாவின் ரணங்கள்

நரகமாகும் காதல் கணங்கள்

ஒருமுறை மடியிலே

உறங்குவேன் வா பெண்ணே

தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்

தவணை முறையில்

மரணம் நிகழும்

அருகில் வாரயோ

விரல்கள் தாரயோ

  • கவிஞர் தாமரை

கோடையில் மழைவரும்

வசந்த காலம் மாறலாம்

எழுதிச் செல்லும்

விதியின் கைகள் மாறுமோ

காலதேவன் சொல்லும்

பூர்வ ஜென்ம பந்தம்

நீ யாரோ

நான் யாரோ

யார் சேர்த்ததோ

ஆயிரம் மலர்களே மலருங்கள்

அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்

காதல் தேவன் காவியம்

நீங்களோ நாங்களோ

நெருங்கி வந்து சொல்லுங்கள்

  • கண்ணதாசன்

Leave a Comment