என்ன செய்தார் சைதை துரைசாமி – 438
டிசம்பர் என்றாலே 2015 போன்று அமைந்துவிடக் கூடாது என்று சென்னைவாசிகளின் இன்றும் அஞ்சுவதுண்டு. மக்களின் நெஞ்சில் உயிர் அச்சத்தை ஏற்படுத்திய ஆண்டு 2015. அந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த பெருமழை, அப்படியான ஒரு சென்னையின் சோக வரலாற்று நிகழ்வாக மாறிப்போனது
இயற்கை கை விட்டாலும் மனிதர்கள் உதவி செய்தார்கள். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவிகள் குவிந்தன. மக்கள் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் மேயர் சைதை துரைசாமி அன்று உடனடியாக மக்களை சந்திக்கவில்லை.
அதாவது அன்றைய நாளில், மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்வதைவிட, மாநகராட்சி ஊழியர்கள், அதிகாரிகள், மேயர் உள்ளிட்ட பொறுப்பாளர்களுக்கு ஏராளமான பணிகள் இருந்தன. அதாவது ரோடுகளில் விழுந்துகிடந்த மரங்களை அறுப்பதும், அறுத்து எடுத்ததை அகற்றுவதும், குப்பைகளை நகருக்கு வெளியே அப்புறப்படுத்துவதும் மிகப்பெரும் சவாலாக இருந்தன. அதுபோல் விழுந்த மின்சாரக் கம்பங்கள், தொலைபேசி இணைப்புகள், குடிநீர் இணைப்புகள், கழிவு நீர் இணைப்புகளை சீர்செய்வதற்கு கடுமையான போராட்டம் தேவைப்பட்டது.
இந்தப் பேரிடர் நேரத்தில் மக்களை இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்காக மாநகராட்சி அல்லும்பகலுமாக பாடுபட்டது. ஆனால் அந்த உழைப்பு பெரும்பாலான மக்களுக்குத் தெரியவில்லை. ஏனென்றால் மக்கள் பாதிக்கப்பட்ட தங்கள் வீட்டையும் ரோட்டையும் மட்டும் பார்த்தார்களே தவிர, தங்களைவிட மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இடங்களை சீர்செய்வது அரசுக்கு முதல் பணி என்பதை உணர்ந்து கொள்ளவில்லை.
இதனால் மக்கள் கோபம் ஆட்சியாளர்கள் மீது திரும்பியது. பாராட்டுகளை மட்டுமே கேட்டுவந்த மேயர் சைதை துரைசாமி மக்கள் கோபத்தைப் புரிண்டுகொண்டு அமைதி காத்தார். ஏனென்றால் பாதிப்புகளை சரிசெய்வதே முக்கியம் என்று அதில் தீவிரம் காட்டினார்.
- நாளை பார்க்கலாம்.
