மக்களின் ஜனநாயகப் புரட்சியே அண்ணா திமுக..!

சைதை சா.துரைசாமி, பெருநகர சென்னை முன்னாள் மேயர்

தமிழக அரசியல் வரலாற்றில் அக்டோபர் 17ம் தேதியை மக்கள் ஜனநாயக புரட்சி நாள் என்றே குறிப்பிட வேண்டும். ஏனென்றால், இந்தியாவிலேயே லஞ்சம், ஊழல் மற்றும் குடும்பவாரிசு அரசியலை எதிர்த்து பொதுமக்களால், தொண்டர்களால், ரசிகர்களால் உருவாக்கப்பட்ட ஒரே அரசியல் இயக்கம் அதிமுக மட்டும்தான் என்பதை இன்றைய தலைமுறை அறிந்துகொள்ள வேண்டும்.

1971-க்குப் பிறகான கருணாநிதியின் ஊழல் ஆட்சியை பெருந்தலைவர் காமராஜர் கடுமையாக விமர்சித்தார். அப்போது கருணாநிதி கட்சியை தன்வசப்படுத்துவதற்கு எம்.ஜி.ஆரை ஓரம் கட்டியதுடன் எம்.ஜி.ஆர். மன்றங்களை மு.க.முத்து மன்றங்களாக மாற்றினார். இதனால் ஆத்திரமடைந்த என்னைப்போன்ற எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தினர் 1972 அக்டோபர் 1ம் தேதி ஆலோசனைக்கூட்டம் நடத்தினோம். அந்த கூட்டத்தில், ’தாய்க்கழகமே முக்கியம், தனிக்கொடி தேவையில்லை’ என்று பேசிய எம்.ஜி.ஆரின் காரை மறித்து, திமுகவின் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தினேன். நான் கூறியவை எல்லாம் உண்மையென்று உறுதிபடுத்திக்கொண்ட எம்.ஜி.ஆர்., அக்டோபர் 8ம் தேதி கணக்கு கேட்டார்.

இதையடுத்து, அக்டோபர் 10ம் தேதி திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டார். இந்த செய்தி காட்டுத்தீயாகப் பரவியதும், தமிழகம் முழுக்க எம்.ஜி.ஆருக்காக பொதுமக்கள் இரண்டாம் சுதந்திரப்போர் போன்று ஆவேசமாகப் போராடினார்கள். துயரத்தைத் தாங்கமுடியாமல் சிலர் விஷம் குடித்தும், தீக்குளித்தும் தற்கொலை செய்தார்கள். எம்.ஜி.ஆர் வாழ்க என்று எழுதப்பட்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

மக்களே முன்வந்து நடத்திய கடையடைப்பு, உண்ணாவிரதம், ஊர்வலம், ஆர்ப்பாட்டத்தை முறைப்படுத்த அனகாப்புத்தூர் இராமலிங்கம் தலைமையில் அமைதிக் குழு அமைக்கப்பட்டது. ஆனாலும், போராட்டம் முடியவில்லை. எம்.ஜி.ஆர். புதிய கட்சி தொடங்கவேண்டும் என்பதுதான் போராட்டக்காரர்களின் ஒரே கோரிக்கையாக இருந்தது. அதனால், மக்கள் விருப்பப்படி புதிய கட்சிக்குத் தலைமையேற்க புரட்சித்தலைவர் சம்மதித்தார்.

அப்போது மக்களை சந்தித்த எம்.ஜி.ஆர்., ’‘என் மீது அன்புகொண்ட உடுமலை தோழர் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்ட செய்திகண்டு பதறினேன், துடித்தேன். என்னை கழகத்திலிருந்து நீக்கியதற்காக தீக்குளிப்பு போன்ற உயிர்த்தியாக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், முதலில் என்னை தீவைத்து கொளுத்திவிட்டு, அதன்பிறகு தங்களுக்கு விருப்பமான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்று அண்ணாவின் மீது ஆணையாக கேட்டுக்கொள்கிறேன். எந்தவிதமான தற்கொலை முயற்சியிலும் ஈடுபடாதீர்கள், அது கோழைத்தனம்..’’ என்று உருக்கமாகப் பேசினார்.

மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அனகாபுத்தூர் இராமலிங்கம் பதிவுசெய்த, ’அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ எம்.ஜி.அரின் கட்சியாக அக்டோபர் 17ம் தேதி அறிவிக்கப்பட்டது. முதல் வாரத்திலேயே 11 லட்சம் பேர் உறுப்பினர்களான சாதனை நிகழ்ந்தது. அதனால் ஆங்காங்கே கழகத்தவர்கள் மீது பொய்வழக்குகள் போடப்பட்டன. என்மீதும் 17 பொய் வழக்குகள் போடப்பட்டன.

அதிமுகவில் எம்.ஜி.ஆர். தொண்டர்களுக்கு அதிக அதிகாரம் கொடுத்தார். பொதுச்செயலாளர் முதல் கிளைக்கழகச் செயலாளர்கள் வரை தொண்டர்களால் வாக்களித்து வெற்றி பெறுபவர்களே பதவிக்கு வரமுடியும்…’என்ற ஜனநாயக விதியை அறிமுகப்படுத்தினார்.

அந்த விதியின்படி முதன்முதலாக நடந்த 1980 உட்கட்சித் தேர்தலில் கடும் போட்டி நிலவியது. தொண்டர்களின் ஆதரவுபெற்றவர்கள் மட்டுமே வெற்றி பெற்றனர். ஆனால், தமிழ்நாட்டிலேயே சைதாப்பேட்டை தொகுதிச்செயலாளர் தேர்தலில், நான் மட்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டேன். இதற்காக புரட்சித்தலைவர் என்னை நேரில் அழைத்துப் பாராட்டினார்.

புரட்சித்தலைவரை கட்சியைவிட்டு நீக்கியதற்கு தமிழகமே போர்க்கோலம் பூண்டதும், பலர் உயிர் துறந்ததும், மக்கள் வேண்டுகோளுக்காக அண்ணா திமுக உருவானதும் வரலாறு காணாத புரட்சி. இன்றும் எம்.ஜி.ஆரை குலதெய்வமாக வணங்கும் மக்கள் இருக்கிறார்கள். வாழையடிவாழையாக அதிமுகவுக்கு வாக்களிக்கும் குடும்பங்கள் உள்ளன.

திமுகவை அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த சரியான சூழல் இப்போது அமைந்துள்ளது. பிரிந்து நிற்கும் அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்து, சரியான கூட்டணி அமைத்து தீயசக்தி திமுகவை வேரோடு அழிக்கும் புரட்சித்தலைவரின் லட்சியத்தை நிறைவேற்ற இந்நாளில் சபதமேற்போம்.

…………………………

மக்களின் ஜனநாயகப் புரட்சியே அண்ணா திமுக..!

–      சைதை சா.துரைசாமி

தமிழக அரசியல் வரலாற்றில் அக்டோபர் 17ம் தேதியை மக்கள் ஜனநாயக புரட்சி நாள் என்றே குறிப்பிட வேண்டும். ஏனென்றால், இந்தியாவிலேயே லஞ்சம், ஊழல் மற்றும் குடும்பவாரிசு அரசியலை எதிர்த்து பொதுமக்களால், தொண்டர்களால், ரசிகர்களால் உருவாக்கப்பட்ட ஒரே அரசியல் இயக்கம் அதிமுக மட்டும்தான் என்பதை இன்றைய தலைமுறை அறிந்துகொள்ள வேண்டும்.

1971-க்குப் பிறகான கருணாநிதியின் ஊழல் ஆட்சியை பெருந்தலைவர் காமராஜர் கடுமையாக விமர்சித்தார். அப்போது கருணாநிதி கட்சியை தன்வசப்படுத்துவதற்கு எம்.ஜி.ஆரை ஓரம் கட்டியதுடன் எம்.ஜி.ஆர். மன்றங்களை மு.க.முத்து மன்றங்களாக மாற்றினார். இதனால் ஆத்திரமடைந்த என்னைப்போன்ற எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தினர் 1972 அக்டோபர் 1ம் தேதி ஆலோசனைக்கூட்டம் நடத்தினோம். அந்த கூட்டத்தில், ’தாய்க்கழகமே முக்கியம், தனிக்கொடி தேவையில்லை’என்று பேசிய எம்.ஜி.ஆரின் காரை மறித்து, திமுகவின் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தினேன். நான் கூறியவை எல்லாம் உண்மையென்று உறுதிபடுத்திக்கொண்ட எம்.ஜி.ஆர்., அக்டோபர் 8ம் தேதி கணக்கு கேட்டார்.

இதையடுத்து, அக்டோபர் 10ம் தேதி திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டார். இந்த செய்தி காட்டுத்தீயாகப் பரவியதும், தமிழகம் முழுக்க எம்.ஜி.ஆருக்காக பொதுமக்கள் இரண்டாம் சுதந்திரப்போர் போன்று ஆவேசமாகப் போராடினார்கள். துயரத்தைத் தாங்கமுடியாமல் சிலர் விஷம் குடித்தும், தீக்குளித்தும் தற்கொலை செய்தார்கள். எம்.ஜி.ஆர் வாழ்க என்று எழுதப்பட்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

மக்களே முன்வந்து நடத்திய கடையடைப்பு, உண்ணாவிரதம், ஊர்வலம், ஆர்ப்பாட்டத்தை முறைப்படுத்த அனகாப்புத்தூர் இராமலிங்கம் தலைமையில் அமைதிக் குழு அமைக்கப்பட்டது. ஆனாலும், போராட்டம் முடியவில்லை. எம்.ஜி.ஆர். புதிய கட்சி தொடங்கவேண்டும் என்பதுதான் போராட்டக்காரர்களின் ஒரே கோரிக்கையாக இருந்தது. அதனால், மக்கள் விருப்பப்படி புதிய கட்சிக்குத் தலைமையேற்க புரட்சித்தலைவர் சம்மதித்தார்.

அப்போது மக்களை சந்தித்த எம்.ஜி.ஆர்., ’‘என் மீது அன்புகொண்ட உடுமலை தோழர் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்ட செய்திகண்டு பதறினேன், துடித்தேன். என்னை கழகத்திலிருந்து நீக்கியதற்காக தீக்குளிப்பு போன்ற உயிர்த்தியாக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், முதலில் என்னை தீவைத்து கொளுத்திவிட்டு, அதன்பிறகு தங்களுக்கு விருப்பமான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்று அண்ணாவின் மீது ஆணையாக கேட்டுக்கொள்கிறேன். எந்தவிதமான தற்கொலை முயற்சியிலும் ஈடுபடாதீர்கள், அது கோழைத்தனம்…’’ என்று உருக்கமாகப் பேசினார்.

மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அனகாபுத்தூர் ராமலிங்கம் பதிவு செய்த, ’அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ எம்.ஜி.அரின் கட்சியாக அக்டோபர் 17ம் தேதி அறிவிக்கப்பட்டது. முதல் வாரத்திலேயே 11 லட்சம் பேர் உறுப்பினர்களான சாதனை நிகழ்ந்தது. அதனால் ஆங்காங்கே கழகத்தவர்கள் மீது பொய்வழக்குகள் போடப்பட்டன. என்மீதும் 17 பொய் வழக்குகள் போடப்பட்டன.

அதிமுகவில் எம்.ஜி.ஆர். தொண்டர்களுக்கு அதிக அதிகாரம் கொடுத்தார். பொதுச்செயலாளர் முதல் கிளைக்கழகச் செயலாளர்கள் வரை தொண்டர்களால் வாக்களித்து வெற்றி பெறுபவர்களே பதவிக்கு வரமுடியும்…’ என்ற ஜனநாயக விதியை அறிமுகப்படுத்தினார்.

அந்த விதியின்படி நடந்த 1980 உட்கட்சித் தேர்தலில் கடும் போட்டி நிலவியது. தொண்டர்களின் ஆதரவுபெற்றவர்கள் மட்டுமே வெற்றி பெற்றனர். ஆனால், தமிழ்நாட்டிலேயே சைதாப்பேட்டை தொகுதிச்செயலாளர் தேர்தலில், நான் மட்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டேன். இதற்காக புரட்சித்தலைவர் என்னை நேரில் அழைத்துப் பாராட்டினார்.

ஒரு தனி நபருக்காக தமிழகமே போர்க்கோலம் பூண்டதும், பலர் உயிர் துறந்ததும், மக்கள் வேண்டுகோளுக்காக அண்ணா திமுக உருவானதும் வரலாறு காணாத புரட்சி. இன்றும் எம்.ஜி.ஆரை குலதெய்வமாக வணங்கும் மக்கள் இருக்கிறார்கள். வாழையடிவாழையாக அதிமுகவுக்கு வாக்களிக்கும் குடும்பங்கள் உள்ளன.

எனவே, திமுகவை மக்களிடம் அம்பலப்படுத்தவும், அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தவும் சரியான சூழல் அமைந்துள்ளது. இப்போது பிரிந்து நிற்கும் அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்து, தீயசக்தி திமுகவை வேரோடு அழித்து புரட்சித்தலைவரின் லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும்.

…………………….

மக்களின் ஜனநாயகப் புரட்சியே அண்ணா திமுக..!

–      சைதை சா.துரைசாமி

தமிழக அரசியல் வரலாற்றில் அக்டோபர் 17ம் தேதியை மக்கள் ஜனநாயக புரட்சி நாள் என்றே குறிப்பிட வேண்டும். ஏனென்றால், இந்தியாவிலேயே லஞ்சம், ஊழல் மற்றும் குடும்பவாரிசு அரசியலை எதிர்த்து பொதுமக்களால், தொண்டர்களால், ரசிகர்களால் உருவாக்கப்பட்ட ஒரே அரசியல் இயக்கம் அதிமுக மட்டும்தான் என்பதை இன்றைய தலைமுறை அறிந்துகொள்ள வேண்டும்.

1971-க்குப் பிறகான கருணாநிதி ஆட்சியில் ஊழல் பெருகி, குடும்ப ஆட்சி தலைதூக்கியதை பெருந்தலைவர் காமராஜர் கடுமையாகக் கண்டித்தார். அப்போது கட்சியைக் கட்சியைக் கைப்பற்றுவதற்கும் எம்.ஜி.ஆரை ஓரம் கட்டவும், எம்.ஜி.ஆர். மன்றங்களை மு.க.முத்து மன்றமாக மாற்றவும் கருணாநிதி செய்த சதிகளால் ஆத்திரமடைந்த என்னைப்போன்ற எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தினர் 1972 அக்டோபர் 1ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தினோம். அந்த கூட்டத்தில், ’தாய்க் கழகமே முக்கியம், தனிக்கொடி தேவையில்லை’என்று பேசிய எம்.ஜி.ஆரின் காரை மறித்து, நான் திமுகவின் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தினேன். நான் கூறிய கருத்துகளின் உண்மைத்தன்மையை மற்றவர்களிடம் கேட்டு உறுதிபடுத்திக்கொண்ட எம்.ஜி.ஆர். ஆவேசமானார். அதனாலே, அக்டோபர் 8ம் தேதி பொதுக்கூட்டத்தில் கணக்கு கேட்டார்.

இதையடுத்து, அக்டோபர் 10ம் தேதி திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டார். இந்த செய்தி காட்டுத் தீயாகப் பரவியதும், தமிழகம் முழுக்க எம்.ஜி.ஆருக்காக பொதுமக்கள் இரண்டாம் சுதந்திரப்போர் போன்று ஆவேசமாகப் போராடினார்கள். துயரத்தைத் தாங்கமுடியாமல் சிலர் விஷம் குடித்தும், தீக்குளித்தும் தற்கொலை செய்தார்கள். எம்.ஜி.ஆர் வாழ்க என்று எழுதப்பட்ட வாகனங்கள் மட்டுமே நடமாட அனுமதிக்கப்பட்டன.

மக்களே முன்வந்து நடத்திய கடையடைப்பு, உண்ணாவிரதம், ஊர்வலம், ஆர்ப்பாட்டத்தை முறைப்படுத்த அனகாப்புத்தூர் இராமலிங்கம் தலைமையில் அமைதிக் குழு தொடங்கப்பட்டது. அதன்பிறகும் போராட்டம் தொடர்ந்தது. எம்.ஜி.ஆர். புதிய கட்சி தொடங்கவேண்டும் என்பதுதான் போராட்டக்காரர்களின் ஒரே கோரிக்கையாக இருந்தது. மக்கள் விருப்பப்படி புதிய கட்சி தொடங்குவது மட்டுமே தீர்வு என்று குழுவினர் வலியுறுத்திய பிறகே, புரட்சித்தலைவர் தலைமையேற்க சம்மதித்தார்.

அதன்பிறகு கண்ணீரும் கம்பலையுமாக கூடியிருந்த மக்களிடம் பேசிய எம்.ஜி.ஆர்., ’‘என் மீது அன்பு கொண்ட உடுமலை தோழர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட செய்தி கண்டு பதறினேன், துடித்தேன். என்னை கழகத்தில் இருந்து நீக்கியதற்காக தீக்குளிப்பு போன்ற உயிர்த்தியாக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், முதலில் என்னை தீ வைத்து கொளுத்திவிட்டு, அதன் பிறகு தங்களுக்கு விருப்பமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று அண்ணாவின் மீது ஆணையாக கேட்டுக்கொள்கிறேன்.

எந்தவிதமான தற்கொலை முயற்சியிலும் ஈடுபடாதீர்கள், அது கோழைத்தனம், நான் அடுத்தக்கட்ட திட்டத்தை அறிவிக்கும் வரை எல்லா போராட்டங்களையும் நிறுத்தி வைக்கவேண்டும்…’’ என்று உருக்கமாகப் பேசினார்.

அதன்படி, மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அனகாபுத்தூர் ராமலிங்கம் பதிவு செய்த, ’அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ எம்.ஜி.அரின் கட்சியாக அக்டோபர் 17ம் தேதி அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுக்க பட்டிதொட்டியெங்கும் திமுக கிளைகள் எல்லாம் அதிரடியாக அதிமுக கிளைகளாக மாற்றப்பட்டன. கட்சி தொடங்கிய முதல் வாரத்திலேயே 11 லட்சம் பேர் உறுப்பினர்களான சாதனை நிகழ்ந்தது. அதனால் ஆங்காங்கே கழகத்தவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. என் மீதும் 17 பொய் வழக்குகள் போடப்பட்டன.

அதிமுகவில் ஒரு ஜனநாயகப் புதுமையை எம்.ஜி.ஆர். புகுத்தினார். அதன்படி, ‘அதிமுகவில் தொண்டர்களுக்குத்தான் எதனையும் முடிவு செய்யும் அதிகாரம் உண்டு. பொதுச்செயலாளர் முதல் கிளைக்கழகச் செயலாளர்கள் வரை அனைத்து பொறுப்புகளுக்கும் தொண்டர்களால் வாக்களித்து வெற்றி பெறுபவர்களே பதவிக்கு வரமுடியும்…’ என்று புதிய விதியை அறிமுகப்படுத்தினார்.

அந்த விதியின்படி 1980ம் ஆண்டு முதன்முதலாக நடந்த உட்கட்சித் தேர்தலில் அனைத்துப் பதவிகளுக்கும் கடுமையான போட்டியிருந்தது. தொண்டர்களின் ஆதரவு பெற்றவர்கள் மட்டுமே வெற்றி பெற்றனர். ஆனால், தமிழ்நாட்டிலேயே சைதாப்பேட்டை தொகுதிச் செயலாளர் தேர்தலில், நான் மட்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டேன். இதற்காக புரட்சித்தலைவர் என்னை நேரில் அழைத்துப் பாராட்டினார்.

ஒரு தனி நபருக்காக தமிழகமே போர்க்கோலம் பூண்டதும், பலர் உயிர் துறந்ததும், மக்கள் வேண்டுகோளுக்காக அண்ணா திமுக உருவானதும் வரலாறு காணாத புரட்சி. எம்.ஜி.ஆர். மீது மக்களுக்கு அன்பும் நம்பிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தது என்பதற்கு, அடுத்தடுத்து நடந்த மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும், அதிக தொகுதிகளில் வென்றார், மருத்துவமனையில் இருந்தபடி வென்று, தமிழக முதல்வராகவே மறைந்தார் என்பதே சாட்சி.

இன்றும் எம்.ஜி.ஆரை குலதெய்வமாக வணங்கும் மக்கள் இருக்கிறார்கள். தாத்தா, பேரன், மகன் என்று வாழையடிவாழையாக அதிமுகவுக்கு வாக்களிக்கும் குடும்பங்கள் உள்ளன. எனவே, லஞ்சம், ஊழல், குடும்பவாரிசு அரசியலுக்கு இலக்கணமான திமுகவை மக்களிடம் அம்பலப்படுத்தவும், அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தவும் சரியான சூழல் அமைந்துள்ளது. இப்போது பிரிந்து நிற்கும் அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு, தீயசக்தி திமுகவை வேரோடு அழிக்கவேண்டும் என்ற புரட்சித்தலைவரின் லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும்.

……………………………………………………………………

எம்.ஜி.ஆரின் ஜனநாயகப் புரட்சியே அண்ணா திமுக..!

–      சைதை சா.துரைசாமி

தமிழக அரசியல் வரலாற்றில் அக்டோபர் 17ம் தேதியை மக்கள் ஜனநாயக புரட்சி நாள் என்றே குறிப்பிட வேண்டும். ஏனென்றால், இந்தியாவிலேயே லஞ்சம், ஊழலை எதிர்த்து பொதுமக்களால், தொண்டர்களால், ரசிகர்களால் உருவாக்கப்பட்ட ஒரே அரசியல் இயக்கம் அதிமுக மட்டும்தான். இந்த நாட்களில் நிகழ்ந்த கற்பனைக்கும் அப்பாற்பட்ட அரசியல் பூகம்பத்தை இன்றைய தலைமுறை அறிந்துகொள்ள வேண்டும். 

1971ம் ஆண்டு கருணாநிதி மீண்டும் முதல்வரானதும், எம்.ஜி.ஆரை ஓரம் கட்டவும் எம்.ஜி.ஆர். மன்றங்களை மு.க.முத்து மன்றமாக்கவும் நெருக்கடி கொடுத்தார்.  இதனால் ஆத்திரமடைந்த என்னைப்போன்ற எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தினர் 1972 அக்டோபர் 1ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தினோம்.

அந்த கூட்டத்தில், ’தாய்க் கழகமே முக்கியம், தனிக்கொடி தேவையில்லை’ என்று பேசிய எம்.ஜி.ஆரை தனிமையில் சந்தித்து திமுகவின் சூழ்ச்சிகளை எடுத்துக்கூறினேன். அதனாலே அக்டோபர் 8ம் தேதி பொதுக்கூட்டத்தில் கணக்கு கேட்டார்.

இதையடுத்து, அக்டோபர் 10ம் தேதி திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டார். இந்த செய்தி காட்டுத் தீயாகப் பரவியதும், தமிழகம் முழுக்க எம்.ஜி.ஆருக்காக பொதுமக்கள் இரண்டாம் சுதந்திரப்போர் போன்று ஆவேசமாகப் போராடினார்கள். துயரத்தைத் தாங்கமுடியாமல் சிலர் விஷம் குடித்தும், தீக்குளித்தும் தற்கொலை செய்தார்கள். எம்.ஜி.ஆர் வாழ்க என்று எழுதப்பட்ட வாகனங்கள் மட்டுமே நடமாட அனுமதிக்கப்பட்டது.

மக்களே முன்வந்து நடத்திய கடையடைப்பு, உண்ணாவிரதம், ஊர்வலம், ஆர்ப்பாட்டத்தைத் தடுப்பதற்கு அனகாப்புத்தூர் இராமலிங்கம் தலைமையில் அமைதிக் குழு தொடங்கப்பட்டது. அதன்பிறகும் போராட்டம் தொடர்ந்தது. எம்.ஜி.ஆர். புதிய கட்சி தொடங்கவேண்டும் என்பதுதான் போராட்டக்காரர்களின் ஒரே கோரிக்கையாக இருந்தது. மக்கள் விருப்பப்படி புதிய கட்சி தொடங்குவது மட்டுமே தீர்வு என்று குழுவினர் வலியுறுத்திய பிறகே, புரட்சித்தலைவர் தலைமையேற்க சம்மதித்தார்.

அதன்பிறகு கண்ணீரும் கம்பலையுமாக கூடியிருந்த மக்களிடம் பேசிய எம்.ஜி.ஆர்., ’‘என் மீது அன்பு கொண்ட உடுமலை தோழர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட செய்தி கண்டு பதறினேன், துடித்தேன். என்னை கழகத்தில் இருந்து நீக்கியதற்காக தீக்குளிப்பு போன்ற உயிர்த்தியாக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், முதலில் என்னை தீ வைத்து கொளுத்தி விட்டு, அதன் பிறகு தங்களுக்கு விருப்பமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று அண்ணாவின் மீது ஆணையாக கேட்டுக்கொள்கிறேன்.

எந்தவிதமான தற்கொலை முயற்சியிலும் ஈடுபடாதீர்கள், அது கோழைத்தனம், நான் அடுத்தக்கட்ட திட்டத்தை 16ம் தேதி அறிவிக்கும் வரை எல்லா போராட்டங்களையும் நிறுத்தி வைக்கவேண்டும்’’ என்று உருக்கமாகப் பேசினார்.

அதன்படி அக்டோபர் 17ம் தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுக்க பட்டிதொட்டியெங்கும் திமுக கிளைகள் எல்லாம் அதிரடியாக அதிமுக கிளைகளாக மாற்றப்பட்டன.

அதன்பிறகும் ஆளும் திமுகவின் அடக்குமுறை தொடர்ந்தது. அண்ணா திமுக துவக்கப்பட்ட முதல் நாளில் விருத்தாசலத்தில் மாணவர்கள் நடத்திய ஊர்வலத்தில் புகுந்து போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் புத்தக வியாபாரி கோபால் பலியானதுடன், 15 பேருக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். எம்.ஜி.ஆர். ரசிகர்கள் போலீஸாரால் வேட்டையாடப்பட்டு பொய்வழக்கு போடப்பட்டது. என் மீது 17 பொய் வழக்குகள் போடப்பட்டு 9 மாதம் கடும் காவல் தண்டனை பெற்றேன். இத்தகைய அடக்குமுறைகளை மீறி கட்சி தொடங்கிய முதல் வாரத்திலேயே 11 லட்சம் பேர் உறுப்பினரான சாதனை நிகழ்ந்தது.

அதிமுகவில் ஒரு ஜனநாயகப் புதுமையை எம்.ஜி.ஆர். புகுத்தினார். அதாவது, ‘அதிமுகவில் தொண்டர்களுக்குத்தான் எதனையும் முடிவு செய்யும் அதிகாரம் உண்டு. பொதுச்செயலாளர் முதல் கிளைக் கழகச் செயலாளர்கள் வரை அனைத்து பொறுப்புகளுக்கும் தொண்டர்களால் வாக்களித்து வெற்றி பெறுபவர்களே வரமுடியும்’ என்று ஒரு புதிய விதி அறிமுகப்படுத்தினார்.

அந்த விதியின்படி உட்கட்சித் தேர்தல் 1980ம் ஆண்டு நடந்தது. அனைத்துப் பதவிகளுக்கும் கடுமையான போட்டியிருந்தது. தொண்டர்களின் ஆதரவு பெற்றவர்கள் மட்டுமே வெற்றி பெற்றனர். சென்னையில் 14 சட்டமன்ற தொகுதிகளிலும் கடும் போட்டி நிலவியது. ஆனால், தொண்டர்களின் ஒற்றுமை, அன்பினால் நான் மட்டும் சைதாப்பேட்டை தொகுதியில் அமைப்புச்செயலாளராக போட்டியின்றி வெற்றிபெற்றேன். என்னுடைய வெற்றி தமிழகம் முழுக்க பரபரப்பானது. இதற்காக புரட்சித்தலைவர் என்னை நேரில் அழைத்துப் பாராட்டினார்.

ஒரு தனி நபருக்காக தமிழகமே போர்க்கோலம் பூண்டதும், பலர் உயிர் துறந்ததும், மக்கள் வேண்டுகோளுக்காக அண்ணா திமுக உருவானதும் வரலாறு காணாத புரட்சி. எம்.ஜி.ஆர். மீது மக்களுக்கு அன்பும் நம்பிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தது என்பதற்கு, அடுத்தடுத்து நடந்த மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று மறைவு வரையிலும் தமிழக முதல்வராகவே இருந்தார் என்பதே சாட்சி.

எம்.ஜி.ஆரின் செல்வாக்கு, வசீகரத்தை முழுமையாக அறிந்தவர் அண்ணா மட்டும்தான். அதனால்தான் ஈ.வெ.கி.சம்பத்தா, எம்.ஜி.ஆரா என்ற கேள்வி எழுந்தபோது எம்.ஜி.ஆரை தேர்வு செய்தார். எம்.ஜி.ஆரால்தான் திமுக ஆட்சியைப் பிடித்தது என்று மனம் திறந்து பாராட்டினார். அண்ணாவுக்குப் பிறகு கருணாநிதியை முதல்வராக்கியதும், அண்ணா இல்லாத திமுகவை வெல்லவைத்து, மீண்டும் கருணாநிதியை முதல்வராக்கியதும் எம்.ஜி.ஆர்.தான்.

ஆனால், இப்போது திமுகவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் தொடர்பே இல்லை என்பது போன்று போலியான திராவிட வரலாறுகள் உலவுகின்றன. எம்.ஜி.ஆர்தான் திமுக, திமுகதான் எம்.ஜி.ஆர். என்பதை நிரூபிக்கும் திராவிட ஆய்வு நூல் ஒன்று எழுதிவருகிறேன். இதுதான், எம்.ஜி.ஆருக்கும் அதிமுகவுக்கும் மட்டுமின்றி உண்மையான திராவிடத்துக்கும் நான் செலுத்தும் நன்றிக்கடன்.

…………………………………………………………………………………….

எம்.ஜி.ஆரின் ஜனநாயகப் புரட்சியே அண்ணா திமுக..!

  • சைதை சா.துரைசாமி

தமிழக அரசியல் வரலாற்றில் அக்டோபர் 17ம் தேதியை புரட்சி நாள் என்றே குறிப்பிட வேண்டும். ஏனென்றால், உலகிலேயே லஞ்சம், ஊழலை எதிர்த்து தொடங்கப்பட்ட ஒரே அரசியல் கட்சி அதிமுக மட்டும்தான். இந்த நாட்களில் நிகழ்ந்த கற்பனைக்கும் அப்பாற்பட்ட அரசியல் பூகம்பத்தை இன்றைய தலைமுறை அறிய வேண்டும்.  

அண்ணா மறைவுக்குப் பிறகு நடைபெற்ற 1971 சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதி முதல்வராக ஆட்சிக்கு வந்தார். தேர்தல் வெற்றிக்கு உழைத்த எம்.ஜி.ஆருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படவில்லை. திமுகவின் பொருளாளராக எம்.ஜி.ஆர். இருந்தாலும், அவரிடம் கழகக்கணக்குகள் காட்டப்படவில்லை. கட்சிக்கு சொத்து வாங்க நிறுவப்பட்ட டிரஸ்டு மெம்பர்களில் எம்.ஜி.ஆர் நிராகரிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். மன்றங்களை மு.க.முத்து மன்றங்களாக மாற்றுவதற்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. மதுரை மாநாட்டில் எம்.ஜி.ஆருக்குப் பதிலாக மு.க.முத்து தலைமையில் ஊர்வலம் நடந்தது.

இப்படி தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு நிகழ்ந்த அவமதிப்பை பொறுக்கமுடியாமல் கொதித்தெழுந்த எம்.ஜி.ஆர். ரசிகர்களால் 1972, அக்டோபர் 1 அன்று சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த எம்.ஜி.ஆர். மன்றங்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் எம்.ஜி.ஆர். மனதில் அதிமுக எனும் விதையைத் தூவினேன்.  இதையடுத்தே எம்.ஜி.ஆர். 8ம் தேதி கணக்கு கேட்டார். 10ம் தேதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட தகவல் கேள்விப்பட்டதும், ‘எம்ஜிஆர் என்ன தவறு செய்தார்?’ என்று திமுகவினர், எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தினர், பொதுமக்கள் ரோட்டில் இறங்கி போராட்டம் நடத்தினார்கள்.

சீனப் படையெடுப்பின் போது மாணவர்கள் கார், பேருந்து, லாரிகளையெல்லாம் நிறுத்தி கோஷங்கள் எழுதியது போல, கருணாநிதிக்கு எதிராக கோஷங்கள் எழுதப்பட்டன. எம்ஜிஆருக்கு ஆதரவாக நகரங்களிலெல்லாம் பூரண கடையடைப்பு, ஊர்வலம், ஹர்த்தால் நடைபெற்றது. திமுக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. கருணாநிதியின் படங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

அமைதியாகப் போராடிய எம்.ஜி.ஆர். ஆதரவாளர்கள் மீது போலீஸ் தடியடி நடந்தது, ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆங்காங்கே வெடித்த போராட்டங்களால் தமிழ்நாடே அல்லோகலப்பட்டது. எம்ஜிஆருக்காக அடையாறு பாலிடெக்னிக் மாணவர் பொன்னையா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். உடுமலைப்பேட்டையில் ஒரு தொண்டர் தீ வைத்து தற்கொலை கொண்டார். இவற்றை அறிந்த எம்.ஜி.ஆர். மனம் உடைந்துபோனார். எம்.ஜி.ஆர். வீட்டுக்கும் சத்யா ஸ்டுடியோவுக்கும் மக்கள் அலையலையாய் வந்தனர்.

இப்படி கண்ணீரும் கம்பலையுமாக காத்திருந்த மக்களிடம் பேசிய எம்.ஜி.ஆர்., ‘என் மீது அன்பு கொண்ட உடுமலை தோழர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக செய்தி வந்திருப்பது கண்டு பதறினேன், துடித்தேன். என்னை கழகத்தில் இருந்து நீக்கியதற்காக தீக்குளிப்பு போன்ற உயிர்த்தியாக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், முதலில் என்னை தீ வைத்து கொளுத்தி விட்டு, அதன் பிறகு தங்களுக்கு விருப்பமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று அண்ணாவின் மீது ஆணையாக கேட்டுக்கொள்கிறேன். எந்தவிதமான தற்கொலை முயற்சியிலும் ஈடுபடாதீர்கள், அது கோழைத்தனம், அப்படி விரும்பினால் முதலில் என்னை தீவைத்து கொளுத்தி விட்டு அதன் பிறகு உங்கள் விருப்பம் போல் செய்து கொள்ளுங்கள். அடுத்தக்கட்ட திட்டத்தை 16ம் தேதி அறிவிக்கும் வரை எல்லா போராட்டங்களையும் நிறுத்தி வைக்கவேண்டும்’’ உருக்கமான வேண்டுகோள் வைத்தார்.

இதையடுத்து, மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில், 17ம் தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கப்பட்டது. இதுகுறித்து, தூய்மை போராட்டக்குழுவின் தலைவர் அனகாப்புத்துார் ராமலிங்கம் அறிவிப்பு வெளியிட்டார்.

‘’கழகத்தோழர்கள் எம்ஜிஆருக்குத் தரும் ஆதரவை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் கிளைக்கழகங்களின் பெயரை அண்ணா திமுக என்று மாற்றியமைத்து தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும்’’ என்று அறிவித்தார்.

அணணா திமுக துவக்கப்பட்ட முதல் நாளில் விருத்தாசலத்தில் அரசினர் கல்லூரி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ஊர்வலத்தில் போலீஸார் தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் புத்தக வியாபாரி கோபால் பலியானார் 15 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். ஆளும் திமுக கடுமையான நெருக்கடி கொடுத்தாலும் கட்சி தொடங்கிய முதல் வாரத்திலேயே 15 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்ததுதான் அதிமுகவின் தனிப்பெரும் சாதனை.

அதோடு, அதிமுகவில் ஒரு ஜனநாயகப் புதுமையான விதியைப் புகுத்தினார் எம்.ஜி.ஆர். அதாவது, ‘’அதிமுகவில் தொண்டர்களுக்குத் தான்  எதனையும் முடிவு செய்யும். அதிகாரம் உண்டு.  இதற்கு அடையாளமாக அண்ணா  திமுக  பொதுச்செயலாளர்,  அவைத்தலைவர் மற்றும் பொருளாளர்கள் பொது உறுப்பினர்களால்  நேரடியாகத்  தேர்ந்தெடுப்பார்கள்..’’ என்று அறிவித்தார்.

நியமனப்பதவி இல்லாமல் தமிழகம் முழுக்க உட்கட்சித் தேர்தல் மூலம் அதிமுக நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. அதனால்தான், எங்களைப் போன்ற சாதாரண தொண்டர்களும் பதவிக்கு வர முடிந்தது. சைதாப்பேட்டை தொகுதியில் அனைத்துப் பொறுப்புகளுக்கும் கடும் போட்டி இருந்த சூழலில், நான் மட்டும் போட்டி இல்லாமல் அமைப்புச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டேன். இந்த சாதனைக்காக என்னை நேரில் அழைத்துப் பாராட்டினார் புரட்சித்தலைவர்.

எம்.ஜி.ஆர். வெளியேறியதால் திமுக உடைந்துவிட்டது. இனி, காங்கிரஸ் கட்சிக்குத்தான் வெற்றி என்று கருதினார் பெருந்தலைவர் காமராஜர். ஆட்சி அதிகாரத்திஐ வைத்து எம்.ஜி.ஆர் செல்வாக்கை முடக்கிவிடலாம் என்று கருணாநிதி நினைத்தார். ஆனால், கட்சி தொடங்கிய ஆறே மாதத்தில் நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தலில் ஆளும் திமுகவையும், எதிர்க்கட்சியான காங்கிரஸையும் வென்று அதிமுக வரலாற்று சாதனை படைத்தது.

எம்.ஜி.ஆரின் செல்வாக்கு, வசீகரத்தை முழுமையாக அறிந்த ஒரே தலைவர் பேரறிஞர் அண்ணா மட்டும்தான். அதனால்தான் ஈ.வெ.கி.சம்பத்தா, எம்.ஜி.ஆரா என்ற கேள்வி எழுந்தபோது எம்.ஜி.ஆரை தேர்வு செய்தார். எம்.ஜி.ஆரால்தான் திமுக ஆட்சியைப் பிடித்தது என்று மனம் திறந்து பாராட்டினார்.

ஆனால், இப்போது திமுகவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் தொடர்பே இல்லை என்பது போன்று போலியான திராவிட வரலாறுகள் உலவுகின்றன. எம்.ஜி.ஆர்தான் திமுக, திமுகதான் எம்.ஜி.ஆர். என்பதை நிரூபிக்கும் திராவிட ஆய்வு நூல் ஒன்று எழுதிவருகிறேன். இதுதான், எம்.ஜி.ஆருக்கும் அதிமுகவுக்கும் மட்டுமின்றி உண்மையான திராவிடத்துக்கும் நான் செலுத்தும் உண்மையான நன்றிக்கடன். 

Leave a Comment