வாத்தியார் ஜோக்ஸ்
ஆசிரியர்: பள்ளிக்கூடத்திற்கு ‘கட்’ அடித்து விட்டு சினிமாவுக்கு போனியாமே, நாளைக்கு உன் அப்பாவைக் கூப்பிட்டு வா…
மாணவன்: சார், அவரும்தான் வேலைக்கு கட் அடிச்சுட்டு படத்துக்கு வந்திருந்தார்.
………………….
ஆசிரியர்: நீ இவ்வளவு மார்க் வாங்குவேன்னு நான் நினைக்கல ரமேஷ்…
மாணவன்: சார், நீங்க பாராட்டுறதா இருந்தா, எனக்கு முன்னாடி பரீட்சை எழுதுன கணேஷைத்தான் பாராட்டணும்.
……………………..
ஆசிரியர் : மூன்றாம் உலகப் போர் வரவேகூடாதுன்னு வேண்டிக்கிறியே, ஏன்..?
மாணவி : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்குமே சார்.
……………………..
ஆசிரியர் : “ஏன்டா, இம்புட்டு அடி வாங்கியும் இனிமே பொய் பேசமாட்டேன்னு ஏன் சொல்ல மாட்டேங்கிறே..?
மாணவன் : அப்படியெல்லாம் என்னால பொய் சொல்ல முடியாது சார்.
………………….
ஆசிரியர் : நாம உயிர் வாழறதுக்கு சுவாசிக்கும் ஆக்ஸிஜனை விஞ்ஞானிகள் 1773ம் ஆண்டுதான் கண்டுபிடிச்சாங்க.
மாணவன் : சார், அதுக்கு முன்னாடி வாழ்ந்தவங்க எதை சார் சுவாசிச்சாங்க.
………………….
ஆசிரியர் : 1869-ம் ஆண்டின் சிறப்பு என்னது?
மாணவன் : எனக்கு தெரியாது சார்.
ஆசிரியர் : மடையா! அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார். சரி, 1874ம் ஆண்டின் சிறப்பு என்ன…?
மாணவன் : அப்போ காந்திஜிக்கு 5 வயசு சார்.