கட்சி மாறுகிறார் தமிழிசை செளந்தரராஜன்..?

Image

உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா

தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என்ற வாசகத்துக்கு சொந்தக்காரர். கேஸ் விலை கிடுகிடுக்க வைக்கிறது, மண்ணெண்ணெய் விலை மலைக்க வைக்கிறது, பெட்ரோல் விலை நடுங்க வைக்கிறது என்றெல்லாம் பேசி பேசி தமிழகத்தில் கட்சியை வளர்க்க என்னென்னவோ முயற்சி செய்து பார்த்தார்.

அவர் தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்தபோது ஒரே ஒரு எம்.பி. தொகுதி மட்டும் பா.ஜ.க.வுக்குக் கிடைத்தது. அதன் பிறகு எல்.முருகனை கொண்டுவந்தார்கள். இதையடுத்து தமிழிசை செளந்தரராஜனுக்குப் புரமோஷன் போன்று கவர்னர் பதவி கொடுத்தார்கள்.

இத்தனை ஆண்டு கஷ்டப்பட்டதற்கு சொகுசான வாழ்க்கை பரவாயில்லை என்று கவர்னர் பதவியில் இருந்தார். அண்ணாமலை தலைவரானதும் தமிழகத்தில் பா.ஜ.க. அபார வளர்ச்சி அடைந்துவிட்டது என்பது போன்று ஒரு பிம்பத்தை உருவாக்கினார்கள். அதனால், முக்கியத் தலைவர்கள் தேர்தலில் நின்றால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும் என்று மேலிடத்தில் சொன்னார்கள்.

அதன்படி எல்.முருகன், தமிழிசை செளந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் களத்தில் இறக்கப்பட்டார்கள். தமிழகத்தில் வெற்றி நிச்சயம், ஜெயித்தால் அமைச்சர் பதவி என்று அமித் ஷா ஆசை காட்டியதால் பேராசையுடன் களத்துக்கு வந்தார் தமிழிசை. ஆனால், தமிழகத்தில் ஒருபோதும் தாமரை மலரவே மலராது என்பது உறுதியாகி இப்போது நடுத்தெருவுக்கு வந்துவிட்டார்.

உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா என்ற கணக்கில் இப்போது மோடியின் அமைச்சரவைக்கே டப்பா டான்ஸ் ஆடுகிறது. அவருக்கு நெருக்கமானவர்களுக்கு பதவி கொடுப்பதற்கே முடியாத சூழல். அதேபோல் இப்போதைக்கு கவர்னர் பதவியும் போட முடியாத நிலை.

இதை பயன்படுத்தி தி.மு.க.வில் இருந்து தமிழிசைக்கு அழைப்பு போயிருக்கிறதாம். இன்னும் ஒரு மாசம் பார்ப்போம். ஏதாச்சும் நல்ல பதவி கிடைக்கலைன்னா வந்துடுறேன் என்று தகவல் கூறி அனுப்பினாராம்.

Leave a Comment