• Home
  • சக்சஸ்
  • திறமை மட்டும் போதாது, இதுவும் வேண்டும்

திறமை மட்டும் போதாது, இதுவும் வேண்டும்

Image

வெற்றிக்கு எட்டு வழிகள்..!

கடுமையாக உழைத்தால் வெற்றிபெற முடியும் என்று சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம். அது உண்மையா என்றால் இல்லவே இல்லை. ஆம், கடுமையான உழைப்பு மட்டும் போதாது, புத்திசாலித்தனமும் இணையும் போதுதான் வெற்றி கிடைக்கும்.

காலை முதல் இரவு வரை கடுமையாக  வேலை செய்பவர்களின் உழைப்பை சாதாரணமாக எடை போட முடியாது, ஆனாலும் அவர்களது வருமானம் மற்றும் வாழ்க்கைத் தரம் என்று பார்த்தால்,  சொல்லிக் கொள்வது போல் எதுவும் இருக்காது. ஒரு நாள் வேலை பார்க்காவிட்டாலும் வருமானம் இல்லாமல் துன்பப் பட வேண்டியிருக்கும்.

இன்னும் சிலர் வேலை பார்ப்பது போன்றே இருக்காது. என்ன வேலை பார்க்கிறார்கள், எங்கே அலுவலகம் இருக்கிறது, எவ்வளவு சம்பளம் என எதுவுமே தெரியாது, ஆனால் கைகளில் எப்போதும் பணம் புரண்டுகொண்டே இருக்கும். நினைத்தநேரத்தில் குடும்பத்துடன் சந்தோஷமாக சுற்றுலா போவார்கள், கொண்டாடுவார்கள். ஆனாலும் பணம் வந்து கொண்டே இருக்கும்.


ஒரு பெரிய கல்லை சின்னஞ்சிறு துகள்களாக உடைக்க மனிதன் வேண்டியதில்லை, ஏனென்றால் அங்கே எந்த புத்திசாலித்தனத்திற்கும் அவசியம் இல்லை. பொடிப்பொடியாக உடைக்கும் வேலையை ஒரு இயந்திரத்திடம் கொடுத்தால் அது இன்னும் சீக்கிரம், இன்னும் சிறப்பாக அந்த பணியை செய்து விடும்.
அப்படியென்றால் இந்த வேலைகளை எல்லாம் யார்தான் செய்வது? மனிதர்கள் எல்லோருமே இப்படி நினைத்துவிட்டால் என்ன ஆகும்? என கவலைப்பட வேண்டாம்.
மாடுகளும் மனிதர்களும் இல்லையென்றால் எப்படி மண்ணை உழ முடியும்? தண்ணீரை கிணற்றில் இருந்து இறைக்க முடியும்? மனிதர்கள் இல்லையென்றால் எப்படி கிணறு தோண்டமுடியும்? என்று இருந்த கேள்விகளுக்கு எல்லாம் விடையாக இயந்திரங்கள் வந்துவிட்டது. அதனால் செய்யும் தொழிலில் அல்லது வேலையில் வெற்றிக்கு ஆசைப்படுபவர்கள் கடைபிடிக்க வேண்டியவை இவைதான்.

  1. தெளிவான இலக்கு

தெளிவான  திட்டத்தை வகுத்தவர்கள் மட்டுமே வெற்றி பெற்ற மனிதர்களாக உலா வர முடியும்.  அதனால் தங்கள் எதிர்பார்ப்பு என்ன, என்ன சாதிக்க வேண்டும் என்ற இலக்கு மிகவும் தெளிவாகவும் குழப்பம் இன்றியும் தேர்வு செய்துகொள்ள வேண்டும்.

2. இலக்குகளை மாற்றுதல்

இலக்கு ஒன்றை வைத்துக்கொண்டு அதில் பயணிப்பது நல்ல விஷயம்தான். ஆனால், அந்த இலக்கு சரியானது இல்லை என்று தோன்றினால் உடனடியாக அதனை மாற்றிவிட வேண்டும். உதாரணத்திற்கு ஒருவருக்கு அமெரிக்காவில் சென்று நல்ல வேலை கிடைத்து செட்டில் ஆகவேண்டும் என்பதுதான் ஆசையாக இருக்கலாம். ஆனால், திடீரென அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சி, கடுமையான கட்டுப்பாடுகள் போன்றவை நிகழும்போது, உடனடியாக தங்களுக்கு புதிய இலக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். அதுதான் வெற்றிக்கான சூத்திரம். .

3. பொறுப்பை உணர்தல்

பொறுப்பை உணர்ந்து நிறைவேற்ற வேண்டும். எந்த ஒரு வேலை என்றாலும், உங்களுக்குப் பதில் வேறு ஒருவர் செய்வார் என்று காத்திருந்தால், அது நடக்கவே நடக்காது. குறிப்பாக  குடும்பத்துக்குச் செய்யவேண்டிய கடமைகள், பொறுப்பை நிறைவேற்றிவிட்டுத்தான் அடுத்தகட்ட செயலுக்கு ஆசைப்பட வேண்டும்.

4. தகுதி, திறமை அறிந்துகொள்தல்

எல்லோருக்கும் சினிமாவில் நடிப்பதற்கு ஆசை இருக்கும். ஆனால், அதற்குரிய தகுதி, ஆசை இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். நடிப்பதற்கெல்லாம் தகுதி எதற்கு என்று நினைப்பவர் யாரும் வெற்றி அடைய முடியாது. அதனால், உங்கள் இலக்கை அடைவதற்கான திறமை, தகுதி உங்களுக்கு இருக்கிறதா என்பதை பரிசீலனை செய்துகொள்ள வேண்டும்.

5. பிறர் கருத்துக்கு மரியாதை

நீங்கள் முடிவு செய்யும் இடத்தில் இருந்தாலும், மற்றவர்கள் சொல்லும் கருத்தைக் கேளுங்கள். ஏனென்றால், வெற்றிகான எளிதான சூத்திரம் ஒவ்வொரு மனிதரிடமும் நிரம்பியிருக்க முடியும். நான் சொன்னதை மட்டும் மற்றவர்கள் செய்தால் போதும் என்று நினைப்பவர்களால் எப்போதும் பெரிய வெற்றி அடைய முடியாது. அனைவருடனும் இணைந்து பயணிப்பவர்களே எளிதில் வெற்றி அடைய முடியும்.

6. தோல்விகளை ஏற்றுக்கொள்

இந்த உலகில் தோல்வியைத் தழுவாமல் நேரடியாக வெற்றி பெற்றவர் யாருமே கிடையாது. அதனால், தோல்வியை சந்தோஷமாக ஏற்றுக்கொள். ஏன் அந்தத் தோல்வி வந்தது, அந்தத் தோல்வியை இனி தவிர்ப்பது எப்படி என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். தோல்வியை ஏற்பவர்தான் வெற்றிக்குத் தகுதியானவராக இருப்பார்.  

7. புகழ்ச்சிக்கு மயங்காதே

புகழ்பாடும் கூட்டம் ஒருவரை சுற்றியிருந்தால், அவரால் நிச்சயம் வெற்றியை நோக்கி நகரவே முடியாது. உண்மைக்கும் பொய்க்கும் புகழ் பாடிக்கொண்டே இருப்பார்கள். பெரிய தோல்வி வந்ததும் அத்தனை பேரும் காணாமல் போவார்கள். அதனால், உடன் இருக்கும் நபர்களின் புகழ்ச்சிக்கு மயங்காதே

8. பாராட்ட மறக்காதே

எந்த ஒரு வெற்றிக்கும் ஒருவரே காரணமாக இருக்க முடியாது. உன்னுடைய தொழில் வெற்றிக்கு அல்லது சாதனைக்கு யாரெல்லாம் காரணமாக இருக்கிறார்களோ, அவர்களை பாராட்டு. நல்ல வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊக்கம் கொடு.

Leave a Comment