ஒரே வரியில் கதை சொல்வதுதான் மைக்ரோ கதைகள். இதோ இணையத்தில் உலவும் சில சூப்பரான மைக்ரோ கதைகள். ரசித்துப் படியுங்கள்.
என் சமையலைக் குறை கூறிக்கொண்டே வளருகிறது உன் தொப்பை.
– கல்யாணி சேகர்
பட்டினியால் இறந்த விவசாயி வாயில் போட்டார்கள் விதை நெல்லை !
– கவிதா ஹரிகரன்
சம உரிமை கேட்ட மனைவியிடம் மாத செலவுக் கணக்கை காட்டி , ‘சமமா பிரிச்சுக்கலாம்’ என்றான்.
-_திலகவதி ரவி
அவன் அதிர்ஷ்டக்காரன், மனைவி கிடைத்தாள், மார்பில் பச்சைக் குத்திய காதலியின் பெயரிலேயே.
– தயா ஜி.வெள்ளைரோ
வாசலில் பசியென்ற பிச்சைக்காரனை விரட்டிவிட்டு கோயிலுக்கு சென்றார், அன்னதானம் செய்ய
- லஷ்மன் மோகனசந்திரன்
ஆம்பலன்ஸ்க்கு போன் செய்யச் சொல்லி அழுதது குழந்தை, மாடியிலிருந்து தவறவிட்ட பொம்மைக்காக.
-_எஸ்.எஸ்.பூங்கதிர்
மாமியாருக்கு பிடித்த எல்லாவற்றையும் சமைத்தாள் மருமகள், திதிக்காக.
– ஸ்ரீதேவி மோகன்
இன்றுடன் உலகம் அழிகிறது, முழு விவரம் நாளைய நாளேட்டில்!
– ராம்