• Home
  • அழகு
  • பைசா செலவில்லாமல் சூப்பர் பியூட்டி

பைசா செலவில்லாமல் சூப்பர் பியூட்டி

Image

கத்துக்கோங்க பெண்களே

பெண்களையும் அழகையும் பிரித்துப்பார்க்க இயலாது. தங்கள் மனதைப் போலவே, உடலையும் அழகாக வைத்திருக்க ஆசைப்படுபவர்கள். ஆனால், அழகுக்காக எல்லோரும் ஆயிரக்கணக்கில் செலவழிக்க முடியுமா என்ன, இதோ செலவே இல்லாமல் அழகாகும் டிப்ஸ்.

* – தூய்மையான சந்தனம், கடுக்காய் 4, கசகசா 2 டேபிள்ஸ்பூன், பாதாம் பருப்பு இவைகளால் தயாரித்த கலவையினை ஃபேஸ் பேக் ஆக பயன்படுத்தலாம். கடைகளில் ஃபேஸ்- மாஸ்க் பொடி விற்கும். அதை வாங்கி ஒரு ஸ்பூன் மாஸ்க் பொடியில் சிறிது வெள்ளரி, கரட், தயிர் சேர்த்துக் குழைத்து பூசி 20 நிமிடம் ஊறினதும் கழுவிவந்தால் முகம் பளிச்சென்று இருக்கும். வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதும்.

-* வெள்ளரிச்சாறும் புதினாச்சாறும் கலந்து முகம், கைகளில் தேய்த்து வரலாம்.

*- கண் இமைகளிலும், புருவங்களிலும் தரமான விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் முடிகள் பளிச்சென்று கருமையாக வளரும்.

-* முட்டைக்கோஸ், முள்ளங்கிச்சாறும் முகத்தை பளிச்சென்றாக்க உதவும்.

-* தலைக்கு முட்டை தேய்த்து குளிப்பது நல்லது.

-* கை, கால் நகங்களைச் சுத்தமாக வெட்டி, வெதுவெதுப்பான நீரில் சோப் துண்டுகளை போட்டு, கொஞ்ச நேரம் அமிழ்த்தி வைத்து பழைய டூத் பிரஷ் கொண்டு சுத்தம் செய்து, நெயில் பாலிஷ் போட்டால் அழகாக இருக்கும்.

* உதடுகள் அழகாக சிவப்பு நிறமாக வேண்டுமானால், கிளிசரின் மற்றும் எலுமிச்சம் பழச்சாறை சம அளவு சேர்த்து தூங்கப் போகும்போது உதடுகளில் தேய்த்து காலையில் எழுந்ததும் கழுவி விடுங்கள்.-

*  கடுக்காய், செம்பருத்திப்பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.-

* முகத்தில் ரத்த ஓட்டம் அதிகமாகி பளிச்சென்ற வசீகரம் கிடைக்க வேண்டுமானால், ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி துளசிச்சாறு கலந்து தினமும் வெறும் வயிற்றில் குடியுங்கள்.

-* பல்லில் இருக்கும் மஞ்சள் நிறத்தைப் போக்க எலுமிச்சம் பழச்சாறும் உப்பும் கலந்து பற்களை தேயுங்கள்.

* -கஸ்தூரி மஞ்சளையும் சந்தனத்தையும் அரைத்து உடலில் பூசுங்கள். அரை மணி நேரம் கழித்து ஒரு மேஜைக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு கலந்த நீரில் குளியுங்கள். இவ்வாறு செய்தால் தோலுக்கு நல்ல நிறமும் தோற்றமும் கிடைக்கும்.

-* கற்கண்டு, தேன், காரட் சாறு, வெள்ளிரி சாறு ஆகியவைகளை சம அளவு சேர்த்து சாப்பிட்டால் முக அழகு அதிகமாகும்.

-* தினமும் தூங்கச் செல்லும் முன்பு ஆமணக்கு எண்ணெய் இமையில் தேய்த்தால் இமை நன்றாக வளரும்.

-* முகத்தில் பால் ஆடையை தேய்த்து அது காயும்போது லேசான சுடு நீரில் முகத்தை கழுவினால் முக அழகு பொலிவு பெறும்.

-* தினமும் காரட் சாப்பிடுவது தோல் அழகுக்கு நல்லது.

* வெள்ளரிச் சாறு, பன்னீர், எலுமிச்சைச் சாறு மூன்றும் சம அளவு கலந்து முகத்தில் தடவவும். சிறிது நேரம் கழித்து முகம் கழுவி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர முகப்பரு குறையும்; முகம் பொலிவடையும்.

* 50 மில்லி பால், சிறிது உப்பு, எலுமிச்சைச் சாறு கலந்து முகம் கழுவினால் சருமத்தில் உள்ள துவாரங்கள் சுத்தமாகும்.

* மஞ்சள், கோதுமை மாவு, நல்லெண்ணை சம அளவு கலந்து முகத்தில் தடவினால் ரோமங்கள் உதிர்ந்துவிடும்.

* ஒரு தேக்கரண்டி உளுந்துடன் 4 பாதாம் பருப்புகளை சேர்த்து தண்ணீரில் ஊற வைத்து அரைக்கவும். முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்துக் கழுவினால் முகம் பொலிவடையும்.

* ஒரு மேஜைக்கரண்டி பால்பவுடர், ஒரு தோல் நீக்கிய வெள்ளரிக்காய், ஒரு தேக்கரண்டி தயிர் ஆகியவற்றை மிக்ஸியில் நன்கு அடித்து, பசையை முகத்தில் தடவவும். 15 -நிமிடம் கழித்து இளம் சூடான நீரில் கழுவினால் முகம் பொலிவடையும்.

* ஒரு முட்டையை நன்கு அடித்து, அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணை கலந்து உலர்ந்த சருமம் உள்ளவர்கள் முகத்தில் தடவினால், சருமம் மிருதுவாகும்.

* அரைத் தேக்கரண்டி தேன், அரைத் தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு மற்றும் 3 மேஜைக் கரண்டி தயிருடன் ஒரு முட்டை வெள்ளை சேர்த்து அடிக்கவும். முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து இளம் சூடான நீரில் முகம் கழுவினால் பளீச்.

*  ஒரு முட்டை மஞ்சள் கரு, ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி விட்டமின்-இ எண்ணை மற்றும் ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்கவும். பின் இளம் சூடான நீரில் கழுவினால் நிறம் கூடும்.

*  ஒரு வாழைப்பழம், ஒரு மேஜைக்கரண்டி தேன், இவையிரண்டையும் நன்கு குழைத்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்கவும். உலர்ந்த சருமம் மிருதுவாகும்.

*  ஓட்ஸை நீரில் நன்கு கலந்து பசை போல் முகத்தில் தடவி உலர விடவும். பின் இளம் சூடான நீரில் கழுவினால் முகம் பொலிவடையும்.

* ஒரு வாழைப்பழம், ஒரு மேஜைக்கரண்டி தேன், இவையிரண்டையும் நன்கு குழைத்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்கவும். உலர்ந்த சருமம் மிருதுவாகும்.

* பயத்தம்பருப்பை அரைத்து மாவு எடுத்து குளிர் தண்ணீரில் விட்டுக் கரைத்து முகத்தில் நன்றாக பூச வேண்டும். காய்ந்தபின்னர் மீண்டும் குளிர் நீரில் கழுவி வந்தால் ஒரு மாதத்தில் கரும்புள்ளிகள், பரு ஓடியே போய்விடும்.

Leave a Comment