சாதனைக்குத் தடையில்லை
சாதிக்க வேண்டும் என்ற வெறியும், வரையறுக்கப்பட்ட இலக்கும், சரியான கண்ணோட்டமும், குறையாத தன்னம்பிக்கையும், தீவிர முயற்சியும் இருந்தால் எப்பேர்ப்பட்ட நிலையிலும் ஒருவன் வெற்றி அடையும் முடியும். அதற்கு இப்படித்தான் தயாராக வேண்டும்.
* நம்மால் எட்ட முடிந்த அளவுக்கு மட்டுமே இலக்கை நிர்ணயிக்க வேண்டும்.
* ஒரு காரியத்தை நீங்கள் மட்டுமே செய்ய முடியும் என்று எப்போது நம்பத் தொடங்குகிறீர்களோ, அப்போதே உங்கள் வீழ்ச்சி தொடங்கிவிடுகிறது.
* பொறுப்புணர்வுதான் வெற்றிக்கு முக்கிய காரணம். அதனால், உங்கள் பொறுப்பை தட்டிக்கழித்தால், மூலையில் தூக்கி வீசப்படுவீர்கள்.
* எப்போதும் கையில் ஒரு மாற்றும் திட்டம் இல்லாவிட்டால், வெற்றியை வேறொருவர் கையில் கொடுத்துவிட நேரிடும்.
* ஒவ்வொரு கட்டத்திலும் நீங்கள் அடைய வேண்டிய உயரத்தின் யதார்த்தமான சாத்தியக்கூறுகளைக் கணக்கிட்டுத் திட்டமிட வேண்டும்.
* நினைப்பதெல்லாம் நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பதை விடுத்து, சூழ்நிலையின் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு கையாள்வதே புத்திசாலித்தனம்.
* தடைகளை எதிர்கொள்ளும்போது சோர்வு ஏற்படுவது சகஜம்தான். ஆனால் விழும்போது நம்மை நாமே எழுப்பிக்கொள்ளும் மனோதைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
* நமக்குப் பிடித்த விஷயம் என்றாலும், அதனை முழு ஈடுபாட்டோடு செய்யும்போது மட்டுமே வெற்றி சாத்தியம்.
* உங்களையும் மற்றவர்களையும் குறித்த நிதர்சனமான பார்வையும் புரிதலும், விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதும் அவசியமாகும்.
* சக போட்டியாளர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் எந்த நேரத்திலும் உங்கள் இடத்தைக் கைப்பற்ற தயாராக இருப்பார்கள்.
* பல நேரங்களில் எதையும் கண்டுகொள்ளாத குருடாகவும், காது கேட்காமல் செவிடாகவும் இருக்கவேண்டியது அவசியம்.
* வெற்றிக்கான தாகம் குறையும்போது, உங்களுடைய லட்சியங்களை அசைபோடுங்கள். அது உத்வேகம் கொடுத்துவிடும்.
* நேரடித் தொடர்புதான் தனித்திறமையை வெளிப்படுத்தவும், நிலையான வெற்றிக்கு அடித்தளமாகவும் கருதப்படுகிறது.
* அவ்வப்போதைய சூழலுக்கு ஏற்ப திட்டங்களை மாற்றிக்கொள்பவர்களே, கீழ் பணிபுரிகிறவர்களால் விரும்பப்படுகிறார்கள்.
* எல்லா கேள்விகளுக்கும் பதில் தெரிந்தவராக தன்னைக் காட்டிக் கொள்கிறவர்கள் தோல்வியையே சந்திப்பார்கள்.
* வெற்றிகரமான தலைவர்கள் அனைவருமே, மற்றவர்களுக்குள் இருக்கும் புத்திக்கூர்மையையும், படைப்புத் திறனையும் ஊக்குவிப்பவர்களாக இருக்கிறார்கள்.
* தொழிலாளர்கள், ஊழியர்களை அங்கீகரித்து பாராட்ட மறுப்பவர்கள் நஷ்டத்தையே சந்திப்பார்கள்.
* நேர்வழியில் வெற்றி பெற்றவர்கள் அதை பகிரங்கமாக தெரிவிப்பதன் மூலம் மற்றவர்களுக்கு உதாரணமாக முடியும்.
* உங்கள் குறைகள் உங்களைக் காட்டிலும் பிறருக்கு நன்றாக தெரியும் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
* எல்லா லட்சியங்களும் வெற்றியை அடையவேண்டிய அவசியமில்லை, அதை நோக்கி செல்வதே வெற்றிதான்.