சிரிப்பு காட்டாதீங்கப்பு

Image

மாணவன் ஜோக்ஸ்

அப்பா ; மகனே இந்த ஒரு பரீட்சையிலாவது 80 மார்க் வாங்குடா..

மகன் : 100 மார்க் வாங்குறேம்ப்பா

அப்பா : டேய் காமெடி பண்ணாதடா.

மகன் : யாருப்பா முதல்ல காமெடி பண்ணது?

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா…

அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?

பையன்: வாத்தியார் பெயர் தான் ராமுப்பா 

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ஆசிரியர் : மனுசனா பொறந்தா ஏதாவது சாதிக்கனும்.

மாணவர் : நல்லவேளை சார். நன் குழந்தையாதான் பிறந்தேன்.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

டீச்சர் : ஏன் கமலா, இப்படியா தலையை விரிச்சுப் போட்டுட்டு வந்திருக்க?

மாணவி : நீங்கதான டீச்சர், ஹோம் ஒர்க் பண்ணலைன்னா, பின்னிடுவேன்னு சொன்னீங்க.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ஆசிரியர் : டேய் பாக்டீரியா படம் வரையச் சொன்னா,ஒண்ணுமே வரையாம இருக்கே…

மாணவன் : சார், அதையெல்லாம் வெறும் கண்ணாலே பார்க்க முடியாது சார்.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

அப்பா: “அடப்பாவி, அஞ்சு பாடத்திலேயும் ஃபெயில் ஆயிட்டே? இனிமே என்னை அப்பானு கூப்பிடா 

மகன்: “சரி மச்சான், கையெழுத்து போடு

Leave a Comment