• Home
  • அரசியல்
  • அமெரிக்காவில் ஸ்டாலின் உடற்பயிற்சி…

அமெரிக்காவில் ஸ்டாலின் உடற்பயிற்சி…

Image

போட்டோ வெளியான காரணம் தெரியுமா?

அமெரிக்காவுக்குச் சென்றிருக்கும் முதல்வர் ஸ்டாலின் முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு கலந்துகொள்வதற்கு முன்பு ஒரு போட்டோ வெளியிடப்பட்டது. இந்த போட்டோ வெளியிட வேண்டிய அவசியம் என்னவென்று இணையதளத்தில் எழுந்த சர்ச்சைக்கு விடை தெரியவந்திருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவுக்குச் செல்வதே உடல் நலப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காகத் தான் என்று செய்தி பரப்பபட்டது. அதனால் அவர் நடக்க முடியாத நிலையில் இருக்கிறார், கைகள் நடுங்குகின்றன என்றெல்லாம் சொல்லப்பட்டன. இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலே, அவர் உடற்பயிற்சி மேற்கொள்வது போன்று ஒரு போட்டோ வெளியிடப்பட்டுள்ளதாம்.

இதையடுத்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான Nokia, PayPal, Yield Engineering Systems, Microchip, Infinx Healthcare மற்றும் Applied Materials ஆகிய 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டார். அதன்படி தமிழ்நாட்டில் 900 கோடி ரூபாய் முதலீடு சென்னை, கோவை, மதுரை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டது.

குறிப்பாக, அப்ளைடு மெட்டீரியல்ஸ் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னை, தரமணியில் செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் உபகரணங்களுக்கான மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் அமைக்கப்படும் எனவும், பேபால் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே சுமார் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவிற்கான மேம்பட்ட வளர்ச்சி மையம் அமைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நிறைய நிறைய முதலீடுகள் கிடைக்கட்டும்.

Leave a Comment