மோடியுடன் ஸ்டாலின் கள்ளக் கூட்டணி..?

Image

விரட்டி வெளுக்கும் நாம் தமிழர்கள்

இத்தனை நாட்களாக சீமானையும் எடப்பாடி பழனிசாமியையும் பா.ஜ.க.வின் பி டீம் என்று உடன்பிறப்புகள் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்கள். ஆனால், இன்று கருணாநிதி நாணய வெளியீடு விழாவுக்காக மத்திய அமைச்சரை வரவழைப்பது, அண்ணாமலைக்கு போனில் அழைப்பு விடுவது, கவர்னர் விருந்துக்குப் போவது, மோடிக்கு நன்றி தெரிவிப்பது என்று காலிலே விழுந்துவிட்டார் எனும் அளவுக்கு ஸ்டாலின் நடவடிக்கைகள் மாறிவிட்டன.

இவற்றை எல்லாம் நாம் தமிழர் தம்பிகள் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார்கள். திராவிட மாடல் என்று முருகனுக்கு மாநாடு நடத்தி காவடி எடுக்கிறார்கள் என்று கிண்டல் அடிக்கிறார்கள்.

நாம் தமிழர் ஆதரவாளர்கள், ‘’திமுக பாஜக கள்ளக் கூட்டணிக்கு இது ஒரு சிறந்த சான்று! தமிழக அரசியலில் எந்த பிரச்சனையும் இல்லாமல் முதல்வர் ஸ்டாலின் தனது மகனுக்கு முடிசூட காத்திருக்கிறார், ஆகவே பாஜகவுடன் மறைமுக ஒப்பந்தங்கள் திமுகவிற்கு இருக்கவே செய்கிறது. அதன் வெளிப்பாடு தான் இதுவரை மாநில அரசுகளை கடுமையாக எதிர்க்கும் பாஜக “கலைஞர் கருணாநிதி” அவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் நாணயத்தை வெளியிடுகிறது. இந்த அடிப்படை கூட தெரியாமல் இந்த இரண்டு கட்சி தொண்டர்களும் சண்டை போடுவதை பார்ப்பதற்கு சிரிப்பாக இருக்கிறது’’ என்று விமர்சனம் செய்கிறார்கள்.

மேலும், ‘’கருணாநிதியின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீட்டுக்கும், கடலுக்கு நடுவே கருணாநிதியின் பேனா சிலை அமைப்பதற்கும் ஒப்புதல் அளிக்கிறது பாஜக அரசு! எட்டுவழிச்சாலை, பரந்தூர் வானூர்தி நிலையம், அதானி காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம், புதிய கல்விக்கொள்கை என பாஜகவின் திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றுவதற்கு ஒப்புக்கொள்கிறது திமுக அரசு’’ என்றெல்லாம் போட்டு வெளுக்கிறார்கள்.

வழக்கத்துக்கு மாறாக இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் தி.மு.க. உடன்பிறப்புகள் அமைதி காக்கிறார்கள். அதுசரி, பேசுற மாதிரியா நடந்துக்கிட்டு இருக்கிறார் ஸ்டாலின்?

Leave a Comment