• Home
  • அரசியல்
  • அமெரிக்கா செல்லும் ஸ்டாலின். அரசாளப்போகும் உதயநிதி  

அமெரிக்கா செல்லும் ஸ்டாலின். அரசாளப்போகும் உதயநிதி  

Image

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கப்பயணம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. இதையடுத்து உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கப்போவது இளைஞர் அணியினரை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

தி.மு.க. இளைஞர் அணியில் இருந்து எம்.எல்.ஏ.வாக மாறி இப்போது அமைச்சராக இருக்கும் உதயநிதி கையில் 2026 சட்டமன்றத் தேர்தலை வெல்வதற்கு வியூகம் அமைப்பதற்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு அணியினரிடமும் ஆலோசனை நடத்திவருகிறார்.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி அமெக்கா செல்வது உறுதியாகியிருக்கிறது. தன்னுடைய மருத்துவம் மற்றும் நாட்டுக்கு  முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் பயணம் செல்வதாக சொல்லப்படுகிறது.

அரசு முறை பயணமாக முதல்வர் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் மத்திய அரசிடம் அனுமதி வாங்கவேண்டும். எனவே, முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்வதற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஸ்டாலினுக்கு 15 நாட்கள் வெளிநாடு சென்று வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரதின கொண்டாட்டத்திற்குப் பிறகு ஸ்டாலின் வெளிநாடு செல்ல இருப்பதால், அதற்கு முன்னதாகவே அமைச்சரவை மாற்றம் செய்யப்பட இருக்கிறது. அனைவரும் எதிர்பார்க்கும் வகையில் உதயநிதியை துணை முதல்வர் பதவியில் நியமனம் செய்துவிட்டே கிளம்புவார் என்று சொல்லப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்தபடி ஆட்சியைக் கவனிப்பார் என்று சொல்லப்பட்டாலும், அனைத்து அதிகாரத்தையும் உதயநிதி கையில் கொடுத்துவிட்டு கிளம்புவார் என்றே தெரிகிறது. ஆக, தமிழகத்தில் சின்னவர் உதயநிதி ராஜாங்கம் தொடங்குகிறது.

Leave a Comment