கோயிலில் பலி, ஸ்டாலின் ராஜினாமா செய்

Image

எடப்பாடி பழனிசாமி சீரியஸ்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிய எடப்பாடி மீது எக்கப்பட்ட விமர்சனங்கள் வந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் ஏற்பட்டன. உடனே கருப்புச்சட்டை போட்டு, ‘ஸ்டாலினே பதவி விலகு’ என்று குரல் எழுப்பினார்.

இதையடுத்து எந்த ஒரு விஷயம் என்றாலும் ஸ்டாலின் அரசு மீது தொடர்ந்து பழி போட்டுவருகிறார் எடப்பாடி பழனிசாமி. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி முத்துமாரியம்மன் திருக்கோயில் தேரை அலங்கரிக்கும் பணிகள் நடந்துக் கொண்டிருந்தபோது, தேரின் ஒரு பகுதி முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததாகவும் மூவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளத செய்திக்கும் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து எடப்பாடி பழனிசாமி, ‘’ஏற்கனவே, திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் தேரின் வடம் தேரோட்டத் திருநாளான 21.06.2024 அன்று நான்கு முறை அறுந்த சம்பவம், பக்தர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்கள் மற்றும் கோயில்களின் சிறப்புவாய்ந்த தேர்களை சரிவர பராமரிக்காத திறனற்ற திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தீவிர பரிசோதனை மேற்கொண்டு, கோயில் மற்றும் கோயில் சொத்துகள் பராமரிப்பை உறுதிசெய்வதுடன், செப்பனிடும் பணிகள் இருப்பின் அவற்றை கவனத்துடன் மேற்கொண்டு, பக்தர்கள் எவ்வித இடர்பாடும் இன்றி மனநிறைவோடு இறைவனை வணங்கும் வகையில் கோயில்களின் தரத்தை உறுதிசெய்யுமாறு விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.

ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை மிஸ் பண்ணீட்டீங்களே மிஸ்டர் பழனிசாமி.

Leave a Comment