எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தாண்டி ஸ்டாலின் வெற்றி

Image
  • தமிழ் லீடர் கணிப்பு அப்படியே நடந்திருக்கிறது.

இதுவரை தமிழக வரலாற்றில் இல்லாத வகையில் ஒட்டுமொத்த தொகுதிகளையும் வெற்றி பெற்று நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின் புதிய சாதனை படைத்திருக்கிறார்.

தமிழ் லீடர் சார்பில் தமிழகம் மற்றும் புதுவைக்கான 40 தொகுதிகளுக்கு எக்ஸ்க்ளூசிவ் தேர்தல் கணிப்பு இதழ் வெளியானது. இந்த தேர்தல் கணிப்பில் தி.மு.க. 38 தொகுதிகளில் எளிதாக வெற்றி அடையும் என்றும் இரண்டு தொகுதிகளில் மட்டும் கடுமையான போட்டியை சந்திக்கும் என்று எழுதியிருந்தோம். அதேநேரம், கடைசி நேர நிலவரப்படி அந்த இரண்டு தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறவே வாய்ப்பு அதிகம் என்று எழுதியிருந்தோம்.

தமிழ் லீடர் கணிப்பு அப்படியே நடந்திருக்கிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத அதிசயமாக தி.மு.க. கூட்டணி ஒட்டுமொத்த சீட்களையும் வென்றுள்ளது. இது போன்ற வெற்றியை எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதாவும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முக்கிய காரணம் முதல்வர் ஸ்டாலின். கூட்டணிக் கட்சிகள் எதுவும் உடைந்து சிதைந்துவிடாமல் கடைசி வரையிலும் மிகவும் உஷாராக இருந்தார்.  அதேபோல் வேட்பாளர் தேர்விலும் மிகவும் கவனம் செலுத்தினார். தங்கள் கட்சி வேட்பாளர் தேர்வு மட்டுமின்றி காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தேர்விலும் கவனம் செலுத்தினார்.

அதேநேரம், எதிர்க்கட்சிகள் ஒற்றுமை இல்லாமல் தனித்தனியே நின்றது தி.மு.க.வின் வெற்றியை மிகவும் எளிமையாக்கிவிட்டது. எடப்பாடி பழனிசாமிக்கும் அண்ணாமலைக்கும் ஸ்டாலின் ரொம்பவே கடமைப்பட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். எப்படியோ ஒரு வரலாற்று வெற்றி தமிழகத்துக்குக் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் நன்மைகள் நடக்கட்டும்.

Leave a Comment