போட்டுத்தாக்குறாங்க.
இரட்டை நாக்கு என்றால் அது ஸ்டாலின். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு பேச்சு, ஆளும்கட்சியாக ஒரு பேச்சு என்று தில்லாலங்கடி வேலைகள் செய்கிறார். இது குறித்து பா.ஜ.க. தலைவர் ஹெச்.ராஜா கிண்டல் செய்திருக்கிறார்.
அவரது அறிக்கையில், ‘’2024 ஆம் வருடத்திற்கான பொங்கல் பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழுக்கரும்பு வழங்க தமிழக முதல்வர் அரசாணை அறிவித்திருப்பதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. திமுக எதிர்கட்சியாக இருந்த போது பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.5000/- வழங்க வேண்டும் என ஸ்டாலின் அன்றைய அதிமுக அரசிடம் வலியுறுத்தினார்.
திமுக எதிர்கட்சியாக இருக்கும் போது குறிப்பிடும் விஷயங்களை ஆளுங்கட்சியாக பொறுப்பேற்ற பிறகு பின்பற்றியதாக வரலாறு இல்லை. இந்த வருடம் அந்த குற்றச்சாட்டிலிருந்து திமுக விடுபடும் வகையிலும் தமிழக மக்கள் சிறப்பாக பொங்கல் திருநாளை கொண்டாட திராவிட மாடல் அரசு குறை வைக்காத வகையிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.5000/- பொங்கல் பரிசாக வழங்க தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்வர வேண்டுமென அறிவுறுத்துகிறேன்.
மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 முழுக்கரும்பு வழங்க தமிழக முதல்வர் அரசாணை பிறப்பித்திருக்கிறார். கடந்த வருடங்களைப் போல விவசாயிகளிடம் இருந்து 1 முழுக்கரும்பை ரூ.16.66/- க்கு கொள்முதல் செய்துவிட்டு அதற்கு ரூ.33/- கணக்கெழுதி கருவூலத்தில் இருந்து பணம் எடுக்காமல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் உண்மையான விலைக்கே கணக்கெழுதி கருவூலத்தில் இருந்து பணம் எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
மிச்சப்படுத்தும் பணத்தை தமிழகத்தின் மீது திராவிட மாடல் ஆட்சியில் வாங்கியுள்ள ரூ.8.33/- லட்சம் கோடி கடனை அடைப்பதற்காக பயன்படுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்..’’ என்று கேட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி இது பற்றி அடித்துத் துவைப்பார் என்று பார்த்தால் அவர்களை முந்திக்கொண்டு பா.ஜ.க. வெளுக்கிறது.