• Home
  • அரசியல்
  • +2 ஃபெயில் மாணவர்களுக்கு ஸ்டாலின் போன் ஆறுதல்.

+2 ஃபெயில் மாணவர்களுக்கு ஸ்டாலின் போன் ஆறுதல்.

Image

ஒவ்வோர் ஆண்டும் +2 தேர்வு ரிசல்ட் வெளிவரும் நேரத்தில் மதிப்பெண் குறைவு, ஃபெயில் போன்ற காரணங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி சில மாணவர்கள் தற்கொலை செய்வதுண்டு. இதனை தடுக்கும் வகையில் ஒரு மாணவிக்கு முதல்வர் ஸ்டாலின் பேசியதாக வெளியாகியிருக்கும் பதிவு பரபரப்பு உண்டாக்கியுள்ளது.

அந்த பதிவில், ’எங்கள் வீட்டு பணிப் பெண்ணின் மகள் இந்த வருடம் +2 தேர்வு எழுதியுள்ளார். அவர் 495/600 எடுத்திருந்தும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவில்லை!. சோகத்தில் ஆழ்ந்திருந்த போது ஒரு போன் கால். எடுத்து பேசினால், மறுமுனையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!

அந்த பெண்ணை நலம் விசாரித்து விட்டு ,” நல்ல மார்க் வாங்கியிருக்கிறாய் கவலைப்படாதே! ஒரு சப்ஜெக்ட் தானே fail? உடனே மறு தேர்வு வைப்பார்கள். நன்றாக படித்து எழுது பாஸ் பண்ணிடலாம்.

மேற்கொண்டு என்ன படிக்க இருக்கிறாய்?  நாளை நீ பள்ளிக்கு செல்லும் போது உன் ஆசிரியரிடம் போனை கொடுத்து என்னிடம் பேச சொல்லு நீ மறு தேர்வு எழுதவும் மேற்படிப்பு படிக்கவும் அவர் வழிகாட்டுவார்”  என்று கூறியிருக்கிறார்!

தோல்வியால் துவண்டிருந்த அந்த பெண் இப்போது உற்சாகத்தில் இருக்கிறார். இது உண்மை இல்லை ரிகார்டட் வாய்ஸ் என்று ஒருசிலர் கூறினாலும் பாராட்ட வேண்டிய விஷயமே.

Leave a Comment