• Home
  • அரசியல்
  • தமிழ் படித்த மாணவர்களுக்கு ஸ்டாலின் ஊக்கதொகை

தமிழ் படித்த மாணவர்களுக்கு ஸ்டாலின் ஊக்கதொகை

Image

ஆகஸ்ட் முதல் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய்

ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியருக்கு ஏராளமான நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பு அரசு பள்ளி மாணவர்களை குஷிப்படுத்தியிருக்கிறது.  

இன்று சென்னையில் நடந்த விழாவில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுத்த மாணவச் செல்வங்களுக்கு தலா 10 ஆயிரம் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள்  வழங்கப்பட்டன.

அதோடு பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் அளவு மாணவ – மாணவியரை தேர்ச்சி பெற வைத்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் – ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி உள்ளிட்டவற்றை கவுரவித்தார்.

மேலும், 67 ஆவது தேசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை குவித்து தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித் தந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, எதிர்கால வீரர் – வீராங்கனையரை அடையாளம் காட்டியதற்காக, விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்கள், கல்லூரிகளில் சேரும்போது மாதம் 1000 ரூபாய் வழங்குகிற ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது என்ற மகிழ்ச்சிக்குரிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

தமிழ் வழியில் படிப்பது வீண் என்று இனி ஒருவரும் சொல்ல முடியாது. ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்வோம்.

Leave a Comment