டாக்டர் ஜோக்ஸ்
டாக்டர்:எதுக்குத்தான் சிபாரிசு கடிதம் வாங்குறதுன்னு விவஸ்தையில்லாமப் போச்சு…
நண்பர்: ஏன்…?
டாக்டர்: ஆபரேசன் பண்ணும் போது ரத்தம் வரக்கூடாதுன்னு மந்திரி கிட்டே சிபாரிசுக் கடிதம் வாங்கிட்டு வந்திருக்கிறார்.
…………………
பெண்: என் கணவருக்கு ஞாபகமறதி அதிகமாயிடுச்சு டாக்டர்..?
டாக்டர்: எப்படியம்மா சொல்றீங்க?
பெண்: பீரோன்னு நினைத்து, பிரிஜ்ஜைத் திறந்து சட்டையைத் தேடுகிறார்…!
…………………..
வாலிபர்: மூன்று மாதமாக எனக்கு கழுத்து வலி டாக்டர்…
டாக்டர்: உங்க மேனேஜர்கிட்டே சொல்லி டைப்பிஸ்ட் சீட்டை முன்னால போடச் சொல்லுங்க…
………………
டாக்டர் : உங்களுடைய நாடித் துடிப்பு ஒரே சீராக ஒரு கடிகாரத்தைப் போலவே இருக்கிறது.
நோயாளி : நீங்கள் இப்போது பிடித்துப் பார்த்துக் கொண்டிருப்பதே என்னுடைய கைகடிகாரத்தைத்தான் டாக்டர்.
…………………………….
ராணுவ நோயாளி : டாக்டர்! ஏன் இப்படித் தினமும் அடிபட்ட இடத்தில் கீறிக்கீறிப் பார்க்கிறீர்கள்? எனக்கு வலி தாங்க முடியவில்லையே!
டாக்டர் : அடிபட்ட இடத்தில் இருக்கும் குண்டை அகற்ற வேண்டாமா? இன்னும் அது கிடைக்கவில்லையே!
நோயாளி : முன்னமே சொல்வதற்கென்ன? அது என் சட்டைப் பையில்தான் இருக்கிறது.
……………………