என்ன செய்தார் சைதை துரைசாமி – 431
ஒருவர் நல்லவராக இருக்கிறார் என்றால், அவர் பொருட்டு எல்லோரும் பெய்யும் மழை என்பார்கள். அப்படித்தான் மேயர் சைதை துரைசாமியின் ராசியால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு ஸ்மார்ட் சிட்டி வாய்ப்பு கிடைத்தது என்றே சொல்லலாம்.
அதாவது, இந்தியாவில் முக்கியமான சில நகரங்களை மட்டும் முதல்கட்டமாக சீர்மிகு நகரங்களாக உருவாக்கும் பட்டியல் வெளியானது. அதில் மேயர் சைதை துரைசாமி மேயராக இருந்த சென்னைக்கு முதல் இடம் கிடைத்தது. அப்போது மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் மூலமாக இந்தியாவில் 98 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட 12 நகரங்களில் சென்னையும் ஒன்று.
ஸ்மார்ட் சிட்டி கொள்கைப்படி நகரின் குடிநீர், மின்சாரம், திடக்கழிவு மேலாண்மை, நகர விரிவாக்க வளர்ச்சி, ஏழைகளுக்கு வீடுகள், தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி போன்ற அனைத்துவிதமான அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படும்.
ஸ்மார்ட் சிட்டி பணியில் சென்னை மாநகராட்சிக்கு ஜே.எல்.எல். என்ற நிறுவனத்துடன் டவுன்லேண்ட் கன்சல்டன்ட் மற்றும் டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் நிறுவனமும் இணைந்து திட்டம் தயாரிப்பதற்கும் மேயர் சைதை துரைசாமி முழு முயற்சிகள் மேற்கொண்டார்.
- நாளை பார்க்கலாம்.
