தி.நகரில் ஆகாய நடைபாதை

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 258

சென்னையில் பாரிமுனை மற்றும் தி.நகர் பகுதியில் நிலவும் கடுமையான நெரிசலை குறைப்பதற்கு முடியும் என்று அதற்கு ஆக்கபூர்வமான பணிகளில் இறங்கியவர் மேயர் சைதை துரைசாமி மட்டும் தான். அவர்தான், மாம்பலம் ரயில் நிலையத்தையும் தியாகராஜ நக்ர் பேருந்து நிலையத்தையும் இணைக்கும் வகையில் ஆகாய நடைபாதை அமைக்க முடியும் என்று திட்டமிட்டார்.

அதேபோன்று சென்னை கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பிராட்வே பேருந்து நிலையம் எனப்படும் என்.சி.போஸ் சாலை வழியாக கடற்கரை ரயில் நிலையத்தையும் இணைக்கும் ஆகாய நடைபாதைக்கும் திட்டமிட்டார். இந்த இரண்டு நடைபாதைக்கும் மேயர் சைதை துரைசாமியின் காலத்திலேயே திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி முடிவுக்கு வந்தது.

தி.நகர் நடைபாதை திட்டம் கடந்த 2023ம் ஆண்டு நிறைவுற்று மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.  தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து மேட்லி சாலை, பார்டர் சாலை வழியாக, மாம்பலம் ரயில் நிலையம் வரை 13 அடி அகலத்தில், 1,968 அடி நீளத்திற்கு நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை மாற்றுத் திறனாளிகளும் பயன்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார் சைதை துரைசாமி. அதன்படி மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் மிக நீளத்தில் அமைக்கப்பட்ட முக்கியமான நடைமேம்பாலமாக தி.நகர் நடைபாதை அமைந்திருக்கிறது என்றால் இந்த திட்டத்துக்கு முழு காரணமாக இருந்தவர் மேயர் சைதை துரைசாமி தான்.  இந்த பாலத்தில் பொதுமக்களை கவரும் வகையில் வண்ண ஓவியங்கள்,  லிஃப்ட் போன்ற வசதிகள் இருக்க வேண்டும் என்றும் திட்டமிட்டார்.

மேயர் சைதை துரைசாமியின் விருப்பப்படி இப்போது மாம்பலம் ரயில் நிலையத்துக்குச் செல்லும் பயணிகளும், அங்கிருந்து வரும் பயணிகளும் எவ்வித சிரமமும் இல்லாமல் பயணிக்க முடிகிறது. அதேநேரம், இந்த பாலத்தில் நடந்து செல்வது ஒரு நல்ல அனுபவமாகவும் மக்களுக்கு அமைந்திருக்கிறது என்றால், இதற்கெல்லாம் காரணம் மேயர் சைதை துரைசாமி தான்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment

Image Not Found

கட்டுரை பகுதிகள்