என்ன செய்தார் சைதை துரைசாமி – 181
பூங்கா என்றாலே குழந்தைகளுக்கு கொண்டாட்டம் தருவதாக இருக்கும். ஏனென்றால் இங்கு ஆடியோடி விளையாடுவதற்கு இடமும், சந்தோஷம் தரும் ஊஞ்சல், சறுக்கல் போன்றவையும் இருக்கும். அதனாலே குழந்தைகள் பூங்காவிற்குச் செல்ல வேண்டும் என்றாலே குஷியாகிவிடுவார்கள். குழந்தைகளுக்கு பூங்காவில் இவை மட்டும் போதாது என்று நினைத்தார் மேயர் சைதை துரைசாமி. அதனால் சிறுவர்கள் விளையாடுவதற்கு மேலும் பல விளையாட்டு உபகரணங்களை பூங்காவில் அறிமுகப்படுத்தினார்.
இந்த உபகரணங்கள் மழையினால் துருப்பிடித்து, குழந்தைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், துருப்பிடிக்காத எஃகினால் நவீன விளையாட்டு உபகரணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. எஃகினால் செய்யப்படும் உபகரணங்கள் நீண்ட நாட்கள் புத்தம்புதிதாக காட்சியளிக்கவும், எளிதில் உடையாமல் தாக்குப்பிடிக்கவும் செய்யும். இந்த எஃகு விளையாட்டு உபகரணங்களால் குழந்தைகளுக்குப் பாதுகாப்பும், கூடுதல் சந்தோஷமும் கிடைக்கவே, பெற்றோர்கள் சைதைக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இடவசதி இருக்கும் பூங்காவில் சிறுவர்கள் பயிற்சி எடுத்துக்கொள்ளவும், திறமைகளைக் காட்டவும் வழிவகை செய்யும் வகையில், ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கப்பட்டது. அதனால் ஏராளமான சிறுவர்கள் ஸ்கேட்டிங் கற்றுக்கொண்டனர். வசதி படைத்தவர்களின் குழந்தைகள் மட்டுமே ஸ்கேட்டிங் பயிற்சி பெறமுடியும் என்ற நிலைமையை மாற்றி, சாதாரண மக்களின் குழந்தைகளும் ஸ்கேட்டிங் கலை கற்றுக்கொள்வதற்கு சைதை துரைசாமிதான் காரணமாக இருந்தார்.
சிறியவர்களுக்கு மட்டும் விளையாடுவதற்கு வசதி ஏற்படுத்தித் தருவது போதாது, அவரகளை அழைத்துவரும் பெற்றோர்களும் உடல் வலு பெறவேண்டும் என்பதற்காக உடற்பயிற்சி சாதனங்கள் பூங்காவில் நிறுவப்பட்டன. நவீன உடற்பயிற்சி கூடங்களில் இருக்கக்கூடிய பல்வேறு சாதனங்கள் பூங்காக்களில் நிறுவப்பட்டன. அதனால் பெண்களும் ஆர்வமாக பயிற்சியில் ஈடுபடுவதை பூங்காக்களில் பார்க்க முடிகிறது என்றால், அதற்குக் காரணம் சைதை துரைசாமிதான்.
- நாளை பார்க்கலாம்.