உலகை குலுக்கிய ஆறு நாட்கள்

ஏப்ரல் 11 – அப்பல்லோ 13

தினமும் ஆயிரக்கணக்கான விபத்துகள் நடக்கின்றன. லட்சக்கணக்கான மனிதர்கள் மரணிக்கிறார்கள். எல்லா விபத்துகளும் பேசப்படுவதில்லை. ஒருசில விபத்துகள் உலகை குலுக்கிவிடுகிறது.

அப்படி ஒன்று அப்பல்லோ 13 விண்கல விபத்து.

இந்த சம்பவம் இங்கிலீஸ் சினிமாவாக எடுக்கப்பட்டு, அதில் டாம் ஹாங்க்ஸ் நடித்து, அதுவும் செம பரபரப்ப்பானது.

இன்று அந்த அப்பல்லோ விண்கலத்துக்கான நாள்.

ஆம், 1970, ஏப்ரல் 11 அன்றுதான் அப்பல்லோ 13 விண்கலம் அமெரிக்காவில் இருந்து நிலவுக்கு ஏவப்பட்டது. இந்த விண்கலத்தில் மூன்று பேர் பயணம் செய்தார்கள். நிலவில் இறங்கி ஆய்வு நடத்துவதற்காக இந்த விண்கலம் அனுப்பப்பட்டது. ஆனால், இரண்டாவது நாளே இந்த விண்கலத்தில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததால், விண்கலம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. நிலவுக்குப் போகமுடியாமல், பூமிக்கும் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இந்த விண்கலம் செயல் இழந்துபோகும் என்ற பேச்சு நிலவியதால் உலகெங்கும் இந்த விண்கலம் குறித்த பரபரப்பு நிலவியது.

ஆறு நாட்களுக்குப் பிறகு அதாவது ஏப்ரல் 17-ம் தேதி பசிபிக் கடலில் இந்த விண்கலம் இறங்கியது. மூன்று பேரும் உயிருடன் மீட்கப்பட்டனர். உலகையே ஒரு வாரம் பதட்டத்தில் வைத்திருந்த அப்பல்லோ ஏவப்பட்டது இன்றைய தினம்தான்.

Leave a Comment