சிங்கப்பூர் பிரதமரின் சாதனை

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 342

கூவம் நதியைப் போன்று மாசு படிந்த ஆறுகளை சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ சுத்தப்படுத்திய சாதனை பற்றி மேயர் சைதை துரைசாமி அறிந்து, அந்த வழியில் கூவத்தை சுத்தப்படுத்த விரும்பிய காலகட்டத்தில் தான் சிங்கப்பூர் செல்வதற்கு அழைப்பு வந்தது.

இந்த நேரத்தில் சிங்கப்பூர் ஆறுகளை பிரதமர் லீ குவான் யூ எப்படி சுத்தப்படுத்தினார் என்பதை வாசகர்கள் அறிந்துகொள்வது நல்லது. 1960 காலகட்டத்தில் சிங்கப்பூரில் ஓடிய சுன்கை ரொங்க் (Sungei Rochor), சுன்கை கல்லாங் (Sungei Kallang), சிங்கப்பூர் நதி (Singapore River) போன்ற முக்கிய ஆறுகள் தொழிற்சாலைகள், குடிநீர் கழிவுகள், கோழி மற்றும் பன்றி பண்ணைகள் ஆகியவற்றின் கழிவுகளால் மாசடைந்திருந்தன.

சுற்றுலாவை மேம்படுத்தவும் மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கவும் உறுதி எடுத்துக்கொண்டு சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ 1977ம் ஆண்டு நதிகளை 10 ஆண்டுகளில் சுத்தப்படுத்துதல் எனும் திட்டத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கினார். இதற்காக லீ குவான் யூ பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அதாவது, ஆற்றங்கரையில் வாழ்ந்த குடும்பங்கள மற்றும் தொழிலாளர்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டனர்.

பன்றி, கோழி பண்ணைகள், தையல் தொழில்கள் போன்றவை நகரப் பகுதிகளில் இருந்து அகற்றப்பட்டன. அதோடு, கழிவு நீர் முறையாக சுத்திகரிக்கப்படாமல் ஆறுகளில் விடப்படுவதைத் தடுக்க, புதுமையான கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் கட்டப்பட்டன. கழிவுநீர் கழிப்பதும், தொழில்தொழில்கள் கழிவுகளைச் செல்லவிடுவதும் கடுமையாகத் தடை செய்யப்பட்டது.

ஆறுகளின் கரைகள் பசுமை பூங்காக்கள், நடைபாதைகள், வணிக வளாகங்கள் ஆகியவையாக மாற்றப்பட்டன. இதனால் சுமார் 10 ஆண்டுகளில் சிங்கப்பூர் நதி உள்ளிட்ட பல ஆறுகள் சுத்தமானவையாக மாற்றப்பட்டன. இது சுற்றுச்சூழல் மேம்பாட்டின் மட்டுமல்ல, சமூக மாற்றத்திற்கும் உதவியது. நீர் வளங்களை பாதுகாப்பது, மீண்டும் பயன்படுத்தக்கூடிய கழிவுநீர் திட்டம் ஆகிய முயற்சிகளுக்கு அடித்தளமாயிற்று. பொதுமக்கள் ஒத்துழைப்புடன் ஒரு அரசு திட்டம் எவ்வளவு வெற்றிகரமாக செயல்பட முடியும் என்பதை இது காட்டியது.

அன்றைய  பிரதமர் லீ குவான் யூ இந்தத் திட்டத்தைத் தொடங்கிய நேரத்தில் பலரும் கிண்டலும் கேலியும் செய்தார்கள். ஆனால், அவர் எதிர்ப்புகளைக் கண்டுகொள்ளாமல்  5 ஆறுகளை கழிவுகளில் இருந்து மீட்டெடுத்தார். இப்போது சிங்கப்பூர் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் விருப்பப்பட்டியலில் ஆற்றுப் பயணமும் ஒன்று.

சிங்கப்பூரில் கழிவு நீர் ஆறுகளை மாற்றம் செய்ய முடிந்தது என்றால் நிச்சயம் சென்னையிலும் செய்துவிட முடியும் என்று நம்பினார் மேயர் சைதை துரைசாமி. இதை எல்லாம் நேரில் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில் சிங்கப்பூரில் நடந்த மேயர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பம் மேயர் சைதை துரைசாமிக்குக் கிடைத்தது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment