லஞ்சத்தை ஒழிக்க சிம்பிள் வழி

Image

ஞானகுரு பதில்கள்

கேள்வி : லஞ்சத்தை ஒழிக்க நிரந்தரமாக அழிக்க ஏதாவது வழியிருந்தால் கூறுங்களேன்..?

  • ஏ.எஸ்.இராஜேந்திரன், வெள்ளூர்.

ஞானகுரு :

தன்னுடைய வேலை சுலபமாகவும், விரைவாகவும் முடியவேண்டும் என்று நினைக்கும் மனிதர்களே லஞ்சத்துக்கு மூல காரணமாக இருக்கிறார்கள். இதனை குறைப்பதற்கு எளிதான வழி இருக்கிறது. அதாவது, லஞ்சம் கொடுப்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். அதை ஒரு தேசிய குற்றமாக அறிவித்து லஞ்சம் கொடுப்பவர்களுக்கு அத்தனை அரசு உதவிகளும் மறுக்கப்பட வேண்டும். இதை செய்துவிட்டால், யாரும் லஞ்சம் கொடுக்க மாட்டார்கள், வாங்கவும் மாட்டார்கள்.

கேள்வி : ஏஐ தொழில்நுட்பம் மனிதரின் வேலையைப் பறித்துவிடுமா….?

  • ஏ.எஸ்.இராஜேந்திரன், வெள்ளூர்.

ஞானகுரு :

பனை மரம் பற்றி உங்களுக்கு 50 வார்த்தைகளில் கட்டுரை வேண்டும் என்றாலும் 50 ஆயிரம் வார்த்தைகளில் வேண்டுமானாலும் சில நொடிகளில் இந்த செயற்கை தொழில்நுட்பம் கட்டுரை வடித்துக் கொடுத்துவிடும். தற்போது சாட்ஜிபிடி, சினாப்சாட்ஸ் மை ஏஐ போன்ற சில செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் கம்ப்யூட்டர் புரோக்ராம் எழுதுவதற்கும், கேள்விகளுக்கு பதிலளிக்கவும், கதைகள் சொல்லவும், ஆய்வுகளுக்கு உதவியும் செய்கின்றன. இந்த தொழில்நுட்பம் காரணமாக உலகம் முழுவதும் 30 கோடி பேர் வேலைக்கு ஆபத்து நேரிடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. உண்மையை பொய் போலவும், பொய்யை உண்மையாகவும் இந்த தொழில்நுட்பங்கள் மாற்றிச் செல்வவதற்கு வாய்ப்பு உண்டு. தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில், புகைப்படம் அல்லது வீடியோவில் மார்ஃபிங் செய்வதற்கும் இந்த செயலிகள் உதவுகின்றன. 3டி உருவங்களை உருவாக்கவும், புகைப்படங்களை பேசச் செய்யவும் முடியும். இந்த செயலிகளுக்கு மனித உணர்வுகளைக் கொடுப்பதற்கும், சிந்திக்கச் செய்வதற்கும் முயற்சி செய்கிறார்கள். ஆனால், இதுபோன்ற செயலிகள் மனிதனைவிட பலமாக மாறலாமே தவிர, புத்திசாலியாக அல்ல.  

Leave a Comment