டெங்கு காய்ச்சலுக்கு சித்த வைத்தியத்தில் மருந்து

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 416

டெங்கு காய்ச்சல் அச்சத்தைத் தவிர்க்கும் வகையிலும், புரளியாகப் பரவும் செய்திகளுக்கு விளக்கம் தரும் வகையிலும் களப்பணியாளர்களை வீடுவீடாகச் செல்வதற்கு அறிவுறுத்தினார் மேயர் சைதை துரைசாமி.

வரும் முன் காப்போம் என்பது போன்று டெங்கு காய்ச்சல் வருவதற்கான காரணங்களைத் தடுப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் மேயர் சைதை துரைசாமி. அவரது உத்தரவின் பேரில் களப்பணியாளர்கள் வீடு வீடாகத் தேடிச் சென்று கொசு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.  

அவர்கள் பொது மக்களிடம், ‘வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாகப் பராமரித்தாலே டெங்கு நோயில் இருந்து தப்பித்துவிட முடியும். குறிப்பாக, வீட்டைச் சுற்றி தண்ணீரைத் தேங்கவிடாதீர்கள். தேங்காய் சிரட்டை, பழைய மண் பானை, டயர் என்று தேவையில்லாத பொருட்களை அகற்றுங்கள். குடிப்பதற்கு குடம், தண்ணீர் தொட்டிகளில் சேமித்துவைக்கும் நீரை நன்றாக கொசு புகாதபடி மூடிவைத்துப் பயன்படுத்துங்கள்.

வீட்டுக்குள் கொசுக்கள் நுழைய முடியாதபடி ஜன்னல்களில் கொசுவலை பயனடுத்துங்கள். படுக்கை அறையுல் கொசுவலை, கொசு விரட்டிகளைப் பயன்படுத்துங்கள். மனிதர்களின் உடலில் வெளிப்படும் வியர்வை வாசம், சுவாசித்தலின்போது வெளிப்படும் கார்பன் டை ஆக்ஸைடு, உடலின் வெப்பம் ஆகியவை கொசுக்களை ஈர்க்கும். எனவே, கை, கால் முழுக்க மறைக்கும் வகையில் ஆடைகளை அணியுங்கள்’ என்று அறிவுறுத்தினார்கள்.

மேயர் சைதை துரைசாமியின் இந்த நடவடிக்கையால் டெங்கு நோய் குறித்த தெளிவும் புரிதலும் மக்களுக்கு ஏற்பட்டது. இந்த நேரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சித்த வைத்தியத்தில் மருந்து இருக்கிறது என்ற நல்ல தகவல் மேயர் சைதை துரைசாமிக்குக் கிடைத்தது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment