• Home
  • மனம்
  • கோபத்தை கொஞ்சம் காட்டுப்பா..!

கோபத்தை கொஞ்சம் காட்டுப்பா..!

Image

ஜென் கதை

சீடன் ஒருவன் குருவை சந்தித்து, ’என்னால் எனது கோபம் வரும்போது கட்டுப்படுத்தவே முடியவில்லை” என்று சொன்னான்.

குரு ஆச்சர்யப்பட்டு அவனிடம், “ உனது கோபம் எங்கே இருக்கிறது? அதை எனக்குக் கொஞ்சம் காட்டு” என்றார். உடனே சீடன்,  “இப்போது எனக்கு யார் மீதும்  கோபம் இல்லை, அதனால் என்னால் அதைக் காட்ட முடியாது” என்றான்.

குரு அந்த பதிலைக் கேட்டதும், “பிரச்னை ஒன்றும் இல்லை. கோபம் வரும்போது என்னிடம் கொண்டுவந்து காட்டு” என்றார்.

சீடன் கடுப்புடன், “கோபம் வந்தவுடன் என்னால் கொண்டுவந்து உடனடியாகக் காட்ட முடியாது. ஏனென்றால் எதிர்பாராத நேரத்தில் திடுமென்றுதான் கோபம் வரும். அதை நான் உங்களிடம் வந்து காட்டுவதற்குள் நிச்சயமாக மறைந்தே போய்விடும்” என்றான் சீடன்.

“அப்படி என்றால் கோபம் என்பது உன்னுடன் ஒட்டிக்கொண்டு இல்லை. அப்படியென்றால் அது உனது உண்மையான இயல்பாக இருக்க முடியாது. திடீரென பிறக்கும் கோபம் என்றால் அது வேறு எங்கிருந்தோதான் உன்னிடம் வருகிறது. அதனால், அது உனக்கு சொந்தம் இல்லாதது, தேவையும் இல்லாதது. கோபம் வரும்போது ஒரு குச்சியை எடுத்து அடித்து விரட்டு” என்றார் குரு.

அதன்பிறகு சீடனுக்கு ஏனோ கோபமே வரவில்லை.

Leave a Comment