அண்ணா பல்கலை மாணவி விருப்பப்படி இருக்கக்கூடாதா..?

Image

நீதிமன்றம் சாட்டையடி கேள்வி

படிக்கிற பொண்ணுக்கு புதருக்குள் என்ன வேலை, படிக்கத்தானே  அனுப்பியிருக்கு அதைத் தவிர மற்றதை செஞ்சா எப்படி என்றெல்லாம் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கருத்து சொன்னவர்களுக்கு சாடையடி கொடுத்திருக்கிறது நீதிமன்றம்.

இது குறித்து நீதிமன்றம், ‘’ஒரு பெண் ஏன் தன் விருப்பப்படி காதல் செய்ய கூடாது? ஏன் தன் விருப்பப்படி உடை அணியக்கூடாது? இரவில் ஏன் தனியாக செல்லக்கூடாது? ஒரு பெண்ணின் விருப்பத்தில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை. பெண்ணின் அனுமதியில்லாமல், அவரை தொட யாருக்கும் அனுமதி இல்லை’’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அதோடு காவல் துறை பொறுப்பின்மையால் எஃப்.ஐ.ஆர். வெளியானதற்கு பெண்ணுக்கு 25 லட்சம் இழப்பீடு வழங்கவும் இலவசக் கல்வி வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. ஒரே ஒருவர் மட்டுமே குற்றவாளி என்ற சென்னை காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க தயங்கக் கூடாது என்று சொன்னதுடன் நில்லாமல் அவர் தலைமையில் இருந்த வழக்கை சிறப்பு புலாய்வுக் குழு வசம் ஒப்படைத்துள்ளது.

அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி சரக சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் மாநகர வடக்குத் துணை ஆணையர் பிருந்தா ஆகிய பெண்கள் மட்டுமே அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணையின் ஆரம்ப கட்டத்திலேயே குற்றத்தில் தொடர்புடையவர் ஒருவர் மட்டுமே என்று சென்னை காவல் துறை ஆய்வாளர் எப்படி ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நீதிமன்றத்தின் கண்காணிப்பில் வழக்கு நடைபெறும் என்பதால் விரைவில் தீர்ப்பு வரும் என்று நம்பலாம்.

Leave a Comment