சுயமாக சம்பாதித்த சொத்திலும் பங்கு தர வேண்டுமா..?

விளக்குகிறார் வழக்கறிஞர் நிலா

சுயமாக சம்பாதித்த சொத்து என்றால், அவரால் என்ன வேண்டுமானாலும் செய்துகொண்ட முடியும் என்ற ஒரு எண்ணம் பொதுவாக உள்ளது. சுயமாக சம்பாதித்த சொத்து என்பது ஒருவர் தனது தனிப்பட்ட வருமானம், உழைப்பு, சொந்த முயற்சி அல்லது பணியாற்றி பெற்ற சம்பளத்தின் மூலம் வாங்கிய சொத்து.

சுயமாக சம்பாதித்த சொத்து என்பது தனிநபருக்கு சொந்தமானது. அவர் வாழ்க்கையில் யாருக்கும் அந்த சொத்துக்கு உரிமை இல்லாது இருக்கலாம். ஆனால் சில சட்டப்பூர்வமான சூழ்நிலைகளில் அதில் சிலர் பங்கீடு கேட்க முடியும்.

திருமண வாழ்க்கையின் போது ஒரு நபர் சம்பாதித்த சொத்தை வைத்து, மற்றவர் வீட்டினை கவனித்திருந்தால், விவாகரத்து நேரத்தில் Maintenance (பராமரிப்பு) அல்லது முழு/பகுதி சொத்துக்கு உரிமை கேட்க முடியும். இந்தியாவில் தற்போது, மனைவிக்கு கணவனின் சொத்துகளில் நேரடியாக உரிமை இல்லை — ஆனால் அவர் கூட்டு பங்களிப்பாளராக இருந்தால் (direct or indirect contribution), நீதிமன்றம் அதைப் பார்க்கும்.

மனைவிக்கு, கணவனின் வீட்டில் வாழும் உரிமை (residence rights) இருக்கலாம், குறிப்பாக அவர் வேறு வசிப்பதற்கு வழியில்லை என்றால் மனைவிக்கு அந்த உரிமை கிடைக்கிறது. இதுபோன்று பல்வேறு சந்தேகங்கள்  எழுவதுண்டு. இது போன்ற அத்தனை சந்தேகங்களுக்கும் சட்டத்தில் விடை இருக்கிறது.

புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு சட்டம் ஒரு வகுப்பறை என்ற நிகழ்ச்சியை யாழினியுடன் இணைந்து தொகுத்து வழங்குகிறார் பிரபல வழக்கறிஞர் நிலா. போன் செய்தும் சந்தேகம் கேட்கலாம். சட்டத்தில் என்ன சந்தேகம் என்றாலும் தயங்காமல் கேட்கலாம். உங்கள் சந்தேகங்களை நிலா நிச்சயம் தீர்த்து வைப்பார்.

YouTube player

Leave a Comment